சாமானிய மக்களின் ஆசையை தூண்டி நடக்கும் பெரும் மோசடி.. ட்ரீம் 11 செயலியில் நடப்பது என்ன.? அதிர்ச்சி ரிப்போர்ட்

Dream 11: ட்ரீம் 11 ஆன்லைன் செயலி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அங்கீகாரம் பெற்ற இந்த ஆப் மூலம் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற போட்டிகளில் குறிப்பிட்ட தொகையைக் கட்டி நம்மால் விளையாட முடியும்.

இதில் கிரிக்கெட் போட்டியில் பணத்தைக் கட்டி விளையாடுபவர்கள் தான் அதிகம். அதிலும் ஐபிஎல் நடைபெறும் சமயங்களில் ட்ரீம் 11 பிஸியாக இருக்கும்.

இது திறமை சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருந்தாலும் இதில் பெரும் மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் முதல் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் வரை விளையாட முடியும்.

நூதன மோசடி

அதில் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்ச பணத்தைக் கட்டி விளையாட முடியும். ஆனால் இதில் வெற்றி பெற்று பெரும் தொகையை பெறுவது என்பதெல்லாம் அவ்வளவு எளிது கிடையாது.

ஆனாலும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தில் பல பேர் சிறு தொகை தானே என விளையாட ஆரம்பிக்கின்றனர். இதில் இந்த செயலியின் நூதன மோசடியும் இருக்கிறது.

உதாரணத்திற்கு நான்கு பேர் பங்கேற்கும் விளையாட்டு என்றால் அதில் கம்பெனி ஆட்கள் இரண்டு பேர் இருப்பார்களாம். இதன் மூலம் அவர்களை ஜெயிக்க வைத்து மொத்த பணமும் கம்பெனிக்கு சென்று விடும்.

ட்ரீம் 11 செயலி மீது புகார்

மேலும் கம்பெனியை சேர்ந்தவர்களுக்கு முதல் பரிசை கொடுத்து சாமானிய மக்களை ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல கோடி மோசடி நடந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண் குமார் என்பவர் டிஜிபியிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ள பல தகவல்களும், ஆதாரங்களும் அதிர்ச்சியை கிளம்பி இருக்கிறது.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ட்ரீம் 11 சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து இந்த செயலி தடை செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்