திலீப் விவகாரத்தில் பாவனாவின் அதிரடி பதிவு.. நியாயம் கிடைக்கும் வரை உங்கள சும்மா விட மாட்டேன்

Actress Bhavana: கடந்த 2017 ஆம் ஆண்டு பாவனாவின் வழக்கு மிக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருக்கு நடந்த கொடுமையால் கொந்தளித்த ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்காக நீதி கேட்டு நின்றது.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆதாரங்கள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது பாவனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் மெமரி கார்டு பலமுறை மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் தன்னுடைய தனி உரிமை பாதுகாப்பாக இல்லை. அதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாவனாவின் அதிர்ச்சி பதிவு

கோர்ட்டில் இது போன்ற தவறு நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலமிழந்து போய்விடுவார்கள். ஆனால் நான் எனக்கான நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கூறி இருக்கிறார்.

அவருடைய இந்த பதிவு தற்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கும் மெமரி கார்டு எப்படி மாற்றப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேசமயம் பாவனாவுக்கு ரசிகர்கள் ஆறுதலும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் திலீப்பின் படம் ரிலீஸ் ஆவதால் இப்படி ஒரு பிரச்சனையை அவர் முன்னெடுக்கிறார் எனவும் அவதூறாக பேசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்