அஜித்தால் டென்ஷன் ஆன சீனியர் சிட்டிசன்.. ஓட்டு போடுற இடத்துலயும் வம்பு இழுத்தா எப்புடி?

Ajithkumar: கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி இருந்தால் எப்படி என்று வடிவேலு புலம்புவார். அஜித்துக்கும் சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு நிலைமைதான். அவர் என்ன செஞ்சாலும் அது கடைசியில சர்ச்சையில் தான் போய் முடியுது.

நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியா வீட்டுல இருந்தா கூட, இவர் ஏன் அமைதியா இருக்கார்னு ஒரு பத்து பேர் கூட்டம் போட்டு விவாதிக்கிறாங்க. அப்படி அசைபோடுற வாய்க்கு இன்னைக்கு அவல் கிடைத்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு.

காலையிலிருந்து சோசியல் மீடியா பக்கம் போனாலே ஒருவிரல் புரட்சி தான். ஒரு பக்கம் மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஓட்டு போட்டுவிட்டு கையில் வைத்திருக்கும் மையம் வந்துச்சு ஒரு பத்து போட்டோ எடுத்து ஒரு விரல் புரட்சி என்று சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

முதல் ஆளாக ஓட்டு போட வந்த அஜித்

வழக்கம் போல விமான நட்சத்திரங்கள் ஓட்டு போடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சம்பவம் தான் வாக்களிக்க வந்தது. நடிகர் அஜித்குமார் இன்னைக்கு முதல் ஆளாக ஓட்டு போட 6.45 மணிக்கு எல்லாம் வாக்கு சாவடிக்கு போய்விட்டார்.

அங்கே கூடியிருந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவருடைய ரசிகர்கள் வானை பிளக்கும் அளவுக்கு சத்தம் போட்டு அவரை வரவேற்றனர். சத்தம் கேட்க முடியாமல் அஜித் காதுகளை மூடிக்கொள்ளும் அளவுக்கு அந்த இடம் பரபரப்பாக இருந்தது.

இப்படி எல்லாம் ஆகிவிடக் கூடாது என்று தான் மனுஷன் விடிஞ்சதுமே ஓட்டு போட வந்திருக்கிறார். ஆனால் அதுக்கு முன்னாடியே அவருடைய வாக்குச்சாவடிக்கு அவருடைய ரசிகர்கள் வந்து குவிந்து விட்டார்கள்.

டென்ஷன் ஆன சீனியர் சிட்டிசன்

வழக்கம் போல இது போன்ற நட்சத்திரங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள். அப்படித்தான் அஜித் வந்ததுமே அவரை ஓட்டு போட உள்ளே அழைத்துப் போயிருக்கிறார்கள்.

ஆனால் அஜித்துக்கு முன்னாடியே சீனியர் சிட்டிசன் ஒருவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். என்ன உள்ள அனுப்பாம, அஜித்தை மட்டும் ஏன் அனுப்புறீங்கன்னு அங்க இருந்த காவல்துறையினர் கிட்ட அவர் பயங்கரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்