சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சன்னியாசிகவே வாழ்ந்து வரும் முரட்டு வில்லன்.. உலகநாயகனை பதறடித்த 47 வயது மோசமான நடிகர்

நடிகர்களின் படங்கள் எப்போது வெளியாகும், அவர்கள் எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பன உள்ளிட்டவற்றை ரசிகர்கள் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். அதே போல அவர்கள் யாரை திருமணம் செய்ய போகிறார்கள், யாருடன் கிசுகிசுக்கப்படுகிறார்கள் என்பதும் ரசிகர்களுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சில நடிகர்கள் காதலித்து திருமணம் செய்வார்கள், சில நடிகர்கள் வீட்டில் பார்ப்போரை திருமணம் செய்வார்கள்.

அதிலும் சில நடிகர்கள் திருமணமே செய்யாமல் இருப்பார்கள். அந்த லிஸ்டில் விஷால், சிம்பு, சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் பிரபல வில்லனும் இணைந்துள்ளார் என்பது தான் சுவாரசியம். படங்களில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழக்கையில் ஹீரோவாக வாழ்ந்து வரும் பல நடிகர்கள் உள்ள நிலையில் பணம், பேர், புகழ் இருந்தும் பிரபல வில்லன் திருமணமாகாமல் உள்ளார்.

Also Read: தியேட்டரில் அலறவிட்ட 6 க்ரைம் த்ரில்லர் படங்கள்.. மெர்சல் செய்த இயக்குனர் கௌதம் மேனன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் மூலமாக நடிகராக அறிமுகமான அந்த நடிகர் தொடர்ந்து பல படங்களில் நடித்தவர். பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும், மிகவும் எளிமையானவர். தற்போது இந்த நடிகருக்கு 47 வயது முடிய உள்ள நிலையில், இன்று வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் காலத்தை கழித்து வருகிறார்.

மறைந்த நடிகர் முரளியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், இன்று தமிழ் சினிமாவில் பல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் டேனியல் பாலாஜி. ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் போலீசாக களமிறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தை தொடர்ந்து உலகநாயகனின் வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பார்.

Also Read: பொல்லாதவன் கிளைமாக்ஸ் இந்த படத்தின் காப்பி தான்.. மட்டமான வேலையால் வருந்திய வெற்றிமாறன்

அமுதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து படம் முழுவதும் உலகநாயகனை கதறவிட்டிருப்பார். தொடர்ந்து வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு சமமான வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். மேலும் வடசென்னை உள்ளிட்ட படத்திலும், நடிகர் விஜய்யின் பைரவா உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியவர். தமிழை தவிர்த்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இப்படி கடந்த 20 வருடங்களாக சினிமாவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் டேனியல் பாலாஜி, இன்று வரை திருமணம் செய்யாமல் உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏன் இவர் திருமணம் செய்யாமல் உள்ளார் என்ற சரியான காரணம் எதுவும் வெளிவராமல் உள்ள நிலையில், கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டு டேனியல் பாலாஜி நன்றாக வாழுமாறு அவரது நலவிரும்பிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது,

Also Read: ஏண்டா இந்த படத்தை விட்டோம் என கதறி அழுத 6 ஹீரோக்கள்.. ஆடுகளம் பேட்டைக்காரன் ரோலை மிஸ் செய்த வில்லன்

- Advertisement -

Trending News