ரெட் ஜெயண்ட்டை மாட்டிவிட்ட லைக்கா.. இந்தியன் 2-வில் இருந்து தப்பிக்க சுபாஸ்கரன் எடுத்த முடிவு

பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2, சந்திரமுகி 2, விடாமுயற்சி என பல படங்கள் லைக்கா லயன் அப்பில் இருக்கிறது. இந்த சூழலில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் லைக்கா நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் தற்போது வரை இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் லைக்கா எந்தவித முயற்சி செய்ய முடியாமல் அவர்களது பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதுமட்டும்இன்றி அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படங்களும் தொடங்க முடியாமல் முடங்கி கிடக்கிறது.

Also Read : தயாரிப்பாளராக கெத்து காட்டும் கமல்.. 500 கோடி பட்ஜெட், 3 ஹீரோக்களால் அரண்டு போன லைக்கா

இந்நிலையில் தமிழ் சினிமாவில் லைக்கா ஆணித்தரமாக கால் பதிக்க மற்றொரு காரணம் உதயநிதி தான். ஏனென்றால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா பல படங்களை தயாரித்து வருகிறது. மேலும் லைக்கா தயாரிக்கும் படங்களை உதயநிதி தான் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார்.

இதன் மூலம் இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நிறைய போய்க் கொண்டிருக்கிறது. இப்போது லைக்காவிடமிருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைப் பற்றி பல தகவல்களை அமலாக்க துறையினர் வாங்கியுள்ளனராம். ஆகையால் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இப்போது பல பிரச்சனையில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : அவருக்கு வில்லனா நடிக்க முடியாது.. விக்ரமை ஒரே செக்கில் ஓகே சொல்ல வைத்த லைக்கா

இதனால் லைக்கா சுபாஸ்கரன் மீது உதயநிதி செம கோபத்தில் உள்ளாராம். அதுமட்டுமின்றி உதயநிதியின் சங்கார்த்தமே இனி வேண்டாம் என்பது போல தான் சுபாஷ்கரனும் இருக்கிறாராம். இப்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை இந்த இரண்டு நிறுவனமும் சேர்ந்து தான் தயாரிக்கிறது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு ரெட் ஜெயண்ட் கூட்டணி போடுவதில்லை என்பதில் லைக்கா உறுதியாக இருக்கிறதாம். மேலும் திட்டம் போட்டு தான் உதயநிதியை சுபாஸ்கரன் மாட்டிவிட்டுள்ளார் என்ற பேச்சும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் இந்த ரெய்டே லைக்காவை வைத்து உதயநிதிக்கு வலை விரிக்க தான் என்று கூறுகிறார்கள்.

Also Read : நாறிப்போன வடிவேலுவின் பெயர்.. மாமன்னனை காப்பாற்ற உதயநிதி எடுத்திருக்கும் முடிவு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை