விஜய்க்கு ஒரு நியாயம், அஜித்துக்கு ஒரு நியாயமா?. ஏகே 62 படத்திற்கு மீண்டும் உருவாகும் பிரச்சனை

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை பூதாகரமாக மாற்றி வருகிறார்கள். ஏனென்றால் தன்னுடைய நடிகரை பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக மற்ற நடிகரைப் பற்றி குத்தம் கண்டுபிடிப்பதிலேயே முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு எதிராக ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கத்தி. இந்த படம் ஆரம்பம் முதலில் ரிலீஸ் வரை பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து கடைசியில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

இந்நிலையில் கத்தி படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. இதை வைத்து அப்போது பிரச்சனை எழுந்த நிலையில் இப்போது அஜித்தின் ஏகே 62 படத்தை லைக்கா தயாரிக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அஜித் ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய குழப்பம் நிலவி வந்தது. இப்போது தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து தூக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படி இருக்கையில் மீண்டும் இந்த படத்திற்கு புதிய பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள்.

Also Read : அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

விஜய் கத்தி படத்தில் நடிக்கும் போது இலங்கை போர் முடிந்த சமயம் என்பதால் லைக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு லைக்கா தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் தயாரித்து உள்ளது. அதுமட்டுமின்றி இங்குள்ள தயாரிப்பாளர்களில் முக்கிய இடம் லைக்காவிற்கு உள்ளது.

பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களும் லைக்கா தயாரிப்பில் தான் உருவாகி வருகிறது. இப்படி இருக்கும் போது அஜித்துக்கு எதிராக இந்த விஷயத்தை விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். இப்படியே போனால் இது வேறு விதமான பிரச்சினையை உருவாக்குமே தவிர ஆரோக்கியமான சினிமாவை கொண்டு வராது.

Also Read : பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

- Advertisement -