தோனியின் மீதான உச்சகட்ட வெறுப்பு.. சச்சினை காலி பண்ணியது கேப்டன் கூல் தானா?

MS Dhoni: ஐபிஎல் போட்டியை பொருத்தவரைக்கும் சென்னை அணி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டனாக இருந்த தோனி தான். மகேந்திர சிங் தோனி, தமிழ்நாட்டில் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டு தான் இந்த அணியை தேர்ந்தெடுத்தாரா என தெரியவில்லை.

இப்போதைக்கு எம் எஸ் தோனி எலக்ஷனில் நின்றால் கூட முதலமைச்சர் ஆகிவிடுவார் போல. சிஎஸ்கே அணி தோற்றுவிடும் என்று நன்றாக தெரிந்த பின்னும், தோனி பேட்டை பிடித்து விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அரங்கமே அதிரும் அளவுக்கு அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அட அப்படி என்னதான் இருக்கிறது இந்த தோனி கிட்ட. உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணியை தலை நிமிர செய்த வித்தை தான் இது எல்லாத்திற்கும் காரணம். தோனிக்கு ஆதரவு இவ்வளவு அதிகமாக இருக்கும் நேரத்தில், வெறுப்பும் அதற்கு ஏற்றவாறு இருக்கிறது.

தோனியை வெறுப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்களா என்று கேட்டால், ஆம் நிச்சயமாக இருக்கிறார்கள். அதுவும் அவருடைய சக விளையாட்டு வீரர்கள் தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. கௌதம் கம்பீர் எப்போ கேப்டன் கூல் பிரச்சனையில் சிக்குவார் என வலை விரித்துக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்.

இது போதாது என்று தோனி தலைமையில் நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும். இது எல்லாத்துக்கும் காரணம் டி-20 கிரிக்கெட் போட்டி தான்.

முதன் முதலில் டி20 கிரிக்கெட் போட்டியின் நடத்தப்பட்டபோது, முழுக்க இளைஞர்கள் இருக்கும் ஒரு அணியை உருவாக்கி தோனியை அதற்கு கேப்டனாக்க பிசிசிஐ முடிவெடுத்தது. இந்த அணி தேறாது என அவர்களை நினைக்கவும் செய்தார்கள்.

பிளே ஆப் வரை சென்று வந்தாலே போதும் என்று தான் அனுப்பி வைத்தார்கள். ஆனால் தோனி தலைமையிலான இந்த அணி. உலக கோப்பையை வென்றது அப்போது அவருக்கு இருந்த வரவேற்பை பார்த்து மற்ற எல்லா விளையாட்டுக்களிலும் அவரை கேப்டன் ஆக்க முடிவு செய்தார்கள்.

அதே நேரத்தில் தோனி தன்னுடைய தலைமையிலான அணியில் இளைஞர்கள் அதிகம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். மூத்த விளையாட்டு வீரர்கள் பிட்னஸ் இல்லாமல் இருப்பதால் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களால் 20 ரன்களை இழக்க நேரிடுவதாக தோனி தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.

சச்சினை காலி பண்ணியது கேப்டன் கூல் தானா?

இருந்தாலும் சச்சின், ஷேவாக், ராகுல் டிராவிட் போன்ற பெரிய வீரர்களை சட்டென குழுவில் இருந்து நீக்குவது பிசிசிஐக்கு சரியாக படவில்லை. இதனால் ரொட்டேஷனல் முறையை கொண்டு வந்து ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு மூத்த வீரர் என்று மாற்றினார்கள்.

இதனால் இவர்களுக்கு விளையாடும் வாய்ப்பு ரொம்பவும் கம்மியானது. இதைத் தொடர்ந்து தான் மாஸ்டர் பிளாஸ்டர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அந்த சமயத்தில் மகேந்திர சிங் தோனியின் அலை இந்தியாவில் அதிகமாக இருந்தது.

இதனால் சச்சினின் கடைசி கால கிரிக்கெட்டை கொண்டாட ஆளில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதேபோன்றுதான் இப்போது தோனி ஐபிஎல் போட்டியிலிருந்து ரிட்டயர் ஆகப்போகிறார் என்பதால் அவர் அதிகமாக கொண்டாடப்படுகிறார்.

இதனால் நன்றாக விளையாடக்கூடிய ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு கொள்வதில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. தோணி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும் அவர் அதிகமாக கொண்டாடப்பட்டதால் மூத்த வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

அதேபோன்று ரிட்டயர் ஆக வேண்டிய காலத்திலும் அதிகமாக கொண்டாடப்படுவதால் இளம் வீரர்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக சிலர் நினைப்பதால் தான் இந்த அளவுக்கு வெறுப்பு தோனி மீது இருக்கிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்