கோடம்பாக்கத்தையே கொளுத்தி போட்ட ஏ ஆர் ரகுமான்.. அணைக்க முடியாமல் தவித்த இளையராஜா

தன்னுடைய எதார்த்தமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜாவுக்கு தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மனதுக்கு இதம் தரும் இவருடைய இசையில் மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. சொல்லப்போனால் ஒரு காலத்தில் திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் இளையராஜாவின் பாடல்கள் தான் ஒலிக்கும்.

அந்த அளவுக்கு ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்ட இளையராஜாவையே ஓரங்கட்டும் வகையில் ஒரு நபரும் திரையுலகுக்கு அறிமுகமானார். அவர் வேறு யாருமல்ல ரசிகர்களால் இசைப்புயல் என்றும் ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் தான் அது.

சிறு சிறு விளம்பர படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த இவர் மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 1992ல் வெளியான இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு திரைக்கதை ஒரு விதத்தில் காரணமாக இருந்தாலும், ஏ ஆர் ரகுமானின் இசை ரசிகர்கள் பலரையும் கொண்டாட வைத்தது. அதுவரை இளையராஜாவின் எதார்த்தமான இசையை ரசித்துக் கொண்டிருந்த மக்கள் புதுவிதமான இந்த இசைக்கு அடிமையாக மாறினார்கள்.

மேலும் யார் அந்த இசையமைப்பாளர் என்று திரையுலகம் முழுவதிலும் இவருடைய பெயர் மட்டும்தான் திரும்பத் திரும்ப கேட்டது. அந்த அளவுக்கு முதல் படத்திலேயே ஏராளமான மக்களை தன் பக்கம் இழுத்த ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அப்போது ஆரம்பித்த அவருடைய பயணம் இன்று வரை முடிவில்லாத ஒரு வெற்றிப் பயணமாக மாறி இருக்கிறது. மேலும் எத்தனையோ புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் இன்று வரை இவருடைய இசையை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் பல வருடங்களாக ரசிகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இளையராஜாவையே ஏ ஆர் ரகுமான் சிறிது அசைத்து பார்த்து விட்டார் என்று அப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு வகையில் இவர் இளையராஜாவுக்கு போட்டியாக வந்துவிட்டார் என்றும், இனிமேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் அப்போது பல செய்திகள் ஊடகங்களை கலக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு புகழுக்கும், பெயருக்கும் சொந்தக்காரரான ஏ ஆர் ரகுமான் மீது ரசிகர்கள் இன்று வரை அதே அன்புடன் தான் இருக்கின்றனர். மேலும் அவர் எத்தனையோ மொழி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் இப்போதும் தன்னை வளத்து விட்ட தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்