6 ஹீரோக்களுக்கு அமைந்த தரமான போலீஸ் கதை.. அஜித், கௌதம் மேனன் காம்போ வேற லெவல்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களது திரை வாழ்க்கையில் அந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்து இருக்கும். அப்படி ஆறு நடிகர்களுக்கு அமைந்த தரமான போலீஸ் கதை மூலம் அவர்களை ஒரு ஸ்டைலிஷ் ஆன கதாநாயகனாகவே மாற்றியது

கமல்: 1989 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்த கமலுடன் ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ராகவன் கேரக்டரில் நடித்திருக்கும் கமல் அறிமுகக் காட்சியிலேயே அட்டமாசமாக மிரட்டி இருப்பார்.

இந்த படத்தில் செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் போலீசாக கமல் சைக்கோ வில்லன்களை துரத்திப் பிடித்திருப்பார். இதன் காரணமாகவே இதுவரை தமிழ் சினிமாவிற்கு வந்த போலிஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களில் வேட்டையாடு விளையாடு படமானது முக்கிய இடத்தை வகிக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதையும் கமலஹாசன் பெற்றார்.

அஜித்: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் டிசிபி சத்யதேவ் ஐபிஎஸ்யாக அஜித் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்துக்கு சிறந்த பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

சூர்யா: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் காக்க காக்க. இப்படத்தில் சூர்யா ஏசிபி அன்புச்செல்வன் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய துணிச்சலான நடிப்புக்கு பலர் இடத்தில் இருந்து பாராட்டு கிடைத்தது.

ஜெயம் ரவி: ஜெயம் ரவிக்கு மார்க்கெட் இல்லை அவ்வளவுதான் காலி என தமிழ் சினிமா ஓரம் கட்டிய தருணத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம், ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையை புரட்டிப்போட்டது. நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஹிப் பாப் தமிழா ஆதி இசையமைத்திருப்பார். தனி ஒருவன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் என்று சொல்லும் அளவிற்கு படம் வரவேற்கப்பட்டிற்கும்.

விஜய் சேதுபதி: 2016 ஆம் ஆண்டு அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் மிரட்டிய திரைப்படம் தான் சேதுபதி. இந்த படத்தில் விஜய் யதார்த்தமான போலீஸ் ஆகவும், போலீஸ் குடும்பத்தில் தங்களது அழுத்தங்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தி இருப்பார். அத்துடன் இதில் சேதுபதி கதாபாத்திரத்தில் தன்னுடைய நிஜப் பெயரிலேயே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். இந்த படம் பலருக்கும் பிடித்தமான படமாகவும் மாறியது.

விஜயகாந்த்: ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நூறாவது படமாக வெளியானது கேப்டன் பிரபாகரன். இப்படத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டம் கிடைத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது.

இவரை இந்த 6 நடிகர்களும் போலீஸ் கெட்டப்பில் மிக கச்சிதமாக பொருந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் நடித்த ஸ்டைலிஷ் ஹீரோவாகவும் மாறினார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் நடித்த இந்த 6 படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -