பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த வார கேப்டன் யார் என்பதை உறுதிப்படுத்திய ப்ரோமோ!

Also Read: அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்