40 வருடங்களாக நிலைத்து நின்ற தயாரிப்பு நிறுவனம்.. ஒரே படத்தால் சோலியை முடித்த அஜித்

அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல மாதங்களாக சூட்டிங் நடைபெற்று வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு அவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

அந்த வகையில் அஜித் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் கடின உழைப்பை கொடுத்து முன்னேறிய அஜித்திற்கு இன்று கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். ஏராளமான வெற்றிகளை படங்களை கொடுத்திருக்கும் இவர் பல தோல்வி திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.

Also read : 16 வருடங்கள் ஏஆர் ரஹ்மானுடன் இணையாத அஜித்.. காரணமான யுவன் ஷங்கர் ராஜா

இவரின் நடிப்பில் வெளிவந்து அதிக நஷ்டத்தை சந்தித்த சில தயாரிப்பாளர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. அதில் முக்கியமான ஒரு நிறுவனம்தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ். நடிகர் திலகம் சிவாஜி ஆரம்பித்த இந்த நிறுவனம் 40 ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிவாகை சூடி இருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட சந்திரமுகி திரைப்படம் இந்த நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

Also read : எம்ஜிஆர், சிவாஜியின் சாதனையை முறியடித்த அடுத்த தலைமுறை நடிகர்.. புது ட்ரெண்டை உருவாக்கிய ஆல்-ரவுண்டர்

அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் கலந்த 2010ம் ஆண்டு அஜித்தை வைத்து அசல் என்ற திரைப்படத்தை தயாரித்தது. சரண் இயக்கத்தில் சமீரா ரெட்டி, பாவனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நஷ்டத்தின் காரணமாக சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் அதன் பிறகு இன்று வரை எந்த திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. அந்த அளவிற்கு அப்படம் பயங்கர நஷ்டத்தை சந்தித்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் மீண்டும் படம் தயாரிக்கும் முயற்சி கூட செய்யவில்லை.

Also read : துணிவு ஷூட்டிங்கில் அஜித்தை காண திரண்ட கூட்டம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி

- Advertisement -