லைக்காவுக்கு சவால் விடும் தயாரிப்பு நிறுவனம்.. அஜித், ராம்சரணை கோடிகளில் குளிப்பாட்டும் தயாரிப்பாளர்

Ajith and Ramcharan: எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் வரை முடிந்தபாடாக இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு ஆரம்பித்து ஆறு மாதங்கள் தாண்டிய நிலையிலும் இந்த வருடத்திற்குள் படம் வெளிவராது என்பது போல் ஸ்லோவாகவே போய்க்கொண்டிருக்கிறது.

அதனால் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இனியும் விடாமுயற்சி படத்தை நம்பி கொண்டு இருப்பது வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி ரஜினி நடித்தவரும் வேட்டையன் படத்திற்கு முழு கவனத்தையும் செலுத்தி பணத்தை வாரி வழங்கி வருகிறார்.

இன்னொரு பக்கம் ஒரே நேரத்தில் லைக்கா நிறுவனம் இரண்டு படங்கள் தயாரிப்பதனால் பண நெருக்கடியில் விடாமுயற்சி படத்தை கண்டுக்காமல் விட்டுவிட்டார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் அஜித்தும் இந்த படத்தை மட்டும் நம்பி இருந்தால் வேஸ்ட் என்று முடிவு பண்ணி அவருடைய 63வது படத்திற்கு தாவி விட்டார்.

லைக்காவுக்கு சவால் விடும் தயாரிப்பு நிறுவனம்

அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகிவிட்டார். இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் ஆகும் பொழுதே, பொங்கல் அன்று ரிலீஸ் பண்ணப்படும் என்று ரிலீஸ் தேதியும் வெளியிட்டு விட்டார்கள். அதன்படி இப்படத்தை விரைவாக முடித்து விட வேண்டும் என்று மொத்த படக்குழுவும முயற்சி செய்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக அஜித்தின் சம்பளம் 175 கோடி வரை பேசப்பட்டிருக்கிறது. அதே மாதிரி தெலுங்கில் ராம்சரனின் RC16 படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது. இதில் இவருடைய சம்பளம் 80 கோடி வரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரே நேரத்தில் அசால்டாக எத்தனை படத்தை வேண்டுமானாலும் தயாரிக்க என்னால் முடியும் என்று லைக்கா நிறுவனத்திற்கு சவால் விடும் விதமாக தொடர்ந்து பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ஹீரோகளுக்கு அதிகமான சம்பளத்தை கொடுத்து அவர்களை பண மழையில் நனைய வைக்க முடியும் என்று தில்லாக இறங்கி இருக்கிறார்கள்.

அதே மாதிரி அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதில் அல்லு அர்ஜுனாக்கு சம்பளமாக 80 கோடி வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்னும் நான்கு படங்களை தயாரித்து இந்த வருடத்திற்குள் ரிலீஸ் பண்ணி பெருத்த லாபத்தை பார்க்க போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்