பருந்து பறக்கவில்லை, தவழ்கிறது.. ரஜினியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அடிக்கடி வம்பிழுக்கும்படியாக பதிவு போட்டு வருகிறார். ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்பே பல நெகட்டிவ் விமர்சனங்களை போட்டு வந்த நிலையில் எல்லாம் தவுடுப்பொடியாக்கி இப்படம் வசூலை வாரி குவித்திருந்தது. ஆனால் இப்போது வரை ஓயாத ப்ளூ சட்டை தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறார்.

அதுவும் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து விடும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இப்போது லியோ படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ஆனாலும் லியோ படத்தின் சாதனையை ஜெயிலர் படைத்தால் முறியடிக்க முடியவில்லை என்று ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது ஜெயிலர் மற்றும் லியோ என இரண்டு படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்திருந்தார். ஆனாலும் ரசிகர்களை பொறுத்தவரையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அளவுக்கு லியோ படத்தின் பாடல்கள் இல்லை என்ற விமர்சனம் தான் வருகிறது. ஆனால் யூடியூப் வீஸ்ஸை வைத்து ஒரு பதிவை ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்.

Also Read : கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

அதாவது லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடல் கிட்டத்தட்ட 178 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் லியோ சாதனையை முறியடிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த வகையில் காவாலா பாடல் 101 மில்லியன் மற்றும் ஹுக்கும் பாடல் 88 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் நான் ரெடி லிரிக் வீடியோ பாடல் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் காவாலா பாடல் அதிக பார்வையாளர்களை பெற காரணம் தமன்னாவால் தான். தலைவரின் பில்டப் பாடலான ஹுக்கும் வெறும் 88 மில்லியன் மட்டுமே இருக்கிறது என ப்ளூ சட்டை நையாண்டி செய்துள்ளார்.

இதன் மூலம் பருந்து பறக்கவில்லை தவழ்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என ப்ளூ சட்டை மாறன் வேடிக்கையாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் இப்போது கடுப்பாகி ப்ளூ சட்டையை வறுத்து எடுத்தார்கள். லியோ வசூலில் திணறுவதை வைத்தே தெரியவில்லையா எப்போதுமே தலைவர் தான் முதலிடம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : இந்தியனுக்கு சாவே கிடையாது.. மிரட்டும் சேனாபதி, ரஜினி வெளியிட்ட இந்தியன் 2 வீடியோ எப்படி இருக்கு?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்