வளையோசை கலகலவென நடிகையை துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்.. விவாகரத்துக்கு பின் மலர்ந்த காதல்

90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய பேரழகால் சில வருடங்கள் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை அமலா. இவர் ஆங்கிலோ இந்தியன் ஆக இருந்தாலும் தென்னிந்திய நடிகைகளுக்கான முக வசீகரத்துடனும், நல்ல நடிப்பு திறமையிடனும் வந்த நடிகை. குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல் மற்றும் ரஜினி உடன் ஜோடி சேர்ந்தார்.

சத்யா திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இவர் நடித்த வளையோசை கலகலவென பாடல் இன்றைய இசை ரசிகர்கள் வரை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதிக மேக்கப் இல்லாத இயற்கை அழகு கொண்ட இந்த நடிகை மீது அப்போதைய சினிமாவின் நிறைய நடிகர்கள் காதல் வசப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Also Read:வில்லனாக எப்படி உருவானேன் தெரியுமா.? 24 வருடத்திற்கு பிறகு ட்ரெண்டாகும் ரகுவரனின் பேட்டி

இதில் ஒரு வில்லன் நடிகரும் அமலாவை உருகி உருகி காதலித்திருக்கிறார். இது வெறும் வதந்தியாக மட்டுமில்லாமல் அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். எந்த பஞ்ச் டயலாக்கும் இல்லாமல் வாட்டசாட்டமான உடலமைப்பும் இல்லாமல் தன்னுடைய உடல் அசைவு மற்றும் குரலை வைத்தே மிரட்டிய ரகுவரன் தான் அந்த நடிகர்.

ரகுவரன் மற்றும் ரோகினியின் காதல், திருமணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அமலாவை காதலித்தது அவ்வளவாக யாருக்கும் தெரியாத செய்தி தான். நடிகர் ரகுவரனும், ரோகினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நாளடைவில் இவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதால் விவாகரத்து செய்து விட்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

Also Read:சாகும் வரை ரகுவரனுக்கு நிறைவேறாத ஆசை.. கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த சோகம்

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ரகுவரன் மற்றும் அமலா கூட்டுப் புழுக்கள் என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்போது ரகுவரனுக்கு அமலாவை ரொம்பவே பிடித்துப் போக தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அமலா இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் ரகுவரன் ரொம்பவே மனம் நொந்து போயிருக்கிறார்.

பின்னாளில் ஒரு பேட்டியில் ரகுவரனே எந்த ஒளிவு மறைவும் இன்றி இதை தெரிவித்து இருக்கிறார். ரகுவரன் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அமலாவை காதலித்ததாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் அமலா தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read:60, 70களில் கொடூர வில்லன்.. மார்க் ஆண்டனிக்கு டஃப் கொடுத்த விக்கல் மன்னன்

- Advertisement -