சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்க்கு நெய்வேலி என்றால் அஜித்துக்கு திருச்சி.. புரளியை கிளப்பிய பிரபல சேனல்

தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் என சொல்வதை விட, வெறியர்கள் இருக்கின்றனர் என சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்க்கும் அஜித்துக்கும் தனித்தனியே எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வெளியில் வந்தாலே அவர்களைப் பார்ப்பதற்கு அவர்களது ரசிகர்கள் கால்கடுக்க, வெயில் மழை என பார்க்காமல் நின்று அலப்பறை செய்வார்கள். அப்படித்தான் இன்று அஜித் திருச்சியில் நடைபெற்ற 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.

இவரை பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் இன்று காலை முதல் போட்டி நடக்கும் இடத்தில் பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் குவிந்தனர். அதன்பிறகு அவர்களைப் பார்த்து கையசைத்து, ரெண்டு கையையும் இணைத்து முத்தமிட்டு ரசிகர்களிடம் அன்பை தெரிவித்தார்.

இதேபோன்று மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய் பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து பிரபல சேனல் அரசியலாக்கி பெரும் புரளியை கிளப்பியிருக்கிறது.

நெய்வேலியில் விஜய்க்காக கூடிய திடீர் கூட்டம் ஒரு பெரிய மாஸ்டர் பிளான். மத்தியில் ஆளும் கட்சிக்கு விஜய் யின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே விஜய் யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அனுமதியுடன், விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரபல சேனல் சமூக வலைதளங்களில் புரளியை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே அரசியலைப் பற்றி கருத்து தெரிவித்த விஜய்யின் தந்தையுடன் அவர் பேச்சுவார்த்தையில் இல்லாத நிலையில், ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல’ அவர்களது சண்டையை மேலும் ஊதி பெரிதாக்குகின்றனர். முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது தவறான வதந்தியை பரப்புவதற்கு தளபதி ரசிகர்கள் பெரும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Trending News