அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோ. தமிழ் சினிமாவின் மாஸ் கலெக்சன் என்பது இன்றுவரை இவருடைய படங்களை நம்பித்தான் இருக்கிறது. இவரை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு போட தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். இதற்கு அவருடைய ரசிகர்கள் தான் மிக முக்கியமான காரணம்.

ஆனால் ரஜினிகாந்த் அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அதிகம். இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மேஜிக் போல் இருக்கிறது. இந்த பட்டத்திற்காக தற்போது நிறைய நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also Read:100 கோடி எல்லாம் தலைவருக்கு அப்பமே அசால்ட்.. 15 வருடத்துக்கு முன்னே ரஜினிக்கு கூரையை பிச்சு கொட்டிய 6 படங்கள்

ரஜினிகாந்த்துக்கு 1978 ஆம் ஆண்டு அவர் தனி ஹீரோவாக நடித்த பைரவி திரைப்படத்திலிருந்து தான் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது. இன்று இந்த பட்டத்திற்கு போட்டி போடும் நடிகர்களை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அந்த காலத்திலேயே இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பிரபல நடிகர் ஒருவர் போட்டியிட்டு இருக்கிறார். கடைசியில் வென்றது ரஜினிகாந்த் தான்.

கிட்டதட்ட 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் மேதையாக இருக்கும் கமலஹாசன் தான் அந்த நடிகர். ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருமே சமகாலத்து போட்டியாளர்கள். இருவரும் இணைந்து பல படங்கள் நடித்தனர். ஒரு கட்டத்தில் தங்களுடைய வெற்றியை நோக்கி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்தனர்.

Also Read:முதன் முதலில் சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்ட படம்.. ரஜினியை எப்போதும் சுற்றி வரும் பாம்பு செண்டிமெண்ட்

ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்ட இரண்டு மூன்று வருடங்களில் கமலஹாசன் ஹிந்தியில் ஏக் துஜே கேலியே என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தின் போது தான் கமலஹாசனுக்கு இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது கோலிவுட்டில் அது சர்ச்சையானாலும், அந்த பட்டம் அதனைத் தொடர்ந்து வேறு எந்த படத்திலும் அவருக்கு கொடுக்கப்படவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் பொருத்தவரைக்கும் இன்றுவரை நல்ல நட்பை பாராட்டி வருகின்றனர். சினிமாவின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு இவர்கள் இருவரையும் எப்போதும் போட்டியாளர்களாக ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது எண்பதுகளின் சமயத்தில் ரொம்பவும் அதிகமாகவே இருந்தது.

Also Read:விஜய் பத்தாது என்று சூப்பர் ஸ்டார் ரேஸுக்கு வந்த அடுத்த நடிகர்.. ரஜினிக்கு வந்த பெரிய சோதனை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை