பல நாட்களாக ஸ்கெட்ச் போட்ட சௌரவ் கங்குலி.. அடுத்த குறி நமக்கு என தெறித்து ஓடிய வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் பொறுப்பை கங்குலி ஏற்றதில் இருந்தே நாளுக்கு நாள் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்.

இந்திய அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி இருந்த போதே தனக்கு நெருங்கிய நண்பரான அனில் கும்ளேவை, அணி பயிற்சியாளராக நியமித்தார். ஆனால் இதை துளியளவும் விரும்பாத விராத் கோலி, தான் விரும்பும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று சண்டையிட்டு, அணில் கும்ப்ளே ராஜினாமா செய்ய வைத்தார்.

அப்போது பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்த எம்எஸ்கே பிரசாத், விராத் கோலியின் பிடியில் தான் இருந்தார். அது மட்டுமின்றி விராட் கோலி, தான் எடுத்த முடிவு தான் செயல்படவேண்டும் என்ற மிதப்பில் இருந்தார். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவருக்கான தேர்தல் வந்தது. அந்த போட்டியில் சௌரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் இந்திய அணியின், பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரிக்கு செக் வைக்கப்பட்டது. அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவே சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளர் பொறுப்பில் அமர வைத்தார்.

டிராவிட் வருகைக்குப்பின் விராட் கோலியின் பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக எடுபடாமல் போனது. இதனைப் புரிந்துகொண்ட விராட் கோலி அடுத்தது நமக்கு தான் குறி, என்று புரிந்து கொண்டு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். விராட் கோலியின் முடிவால் நெகிழ்ச்சி அடைந்த பிசிசிஐ ஒருநாள் போட்டியிலும் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் விராட் கோலி அனைத்து பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை