சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் திரிஷாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் திரிஷா விஜய், அஜித், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் திரிஷா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது திரிஷாவுக்கு 39 வயதாகிறது.
ஆனால் தற்போது வரை சினிமாவில் கதாநாயகியாக திரிஷா நிலைத்து நிற்கக் காரணம் அவருடைய இளமையான தோற்றம் தான். அவ்வாறு உடற்பயிற்சி மூலம் தனது உடலை திரிஷா கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவர் அம்மா என்றே சொல்லலாம்.
அவருடைய அம்மாவும் அதே இளமையான தோற்றத்துடன் தற்போது வரை உள்ளார். இந்நிலையில் இன்று தனது அம்மாவின் பிறந்தநாள் என்பதால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திரிஷா அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில் எல்லாமாக இருக்கும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என த்ரிஷா தனது சிறுவயதில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது தற்போது திரிஷா எப்படி உள்ளாரோ அச்சு அசலாக அதேபோல் அவரது அம்மா உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் திரிஷா அரசியலுக்கு வர உள்ளார் என்ற செய்தியும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் த்ரிஷா ரோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.