அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை.. இந்தியாவை மூட்டை முடிச்சு கட்ட வைத்த 2 பேர்

ஆசிய கோப்பை போட்டிகளில் எப்போதுமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி இந்த முறை மண்ணை கவ்வியது. ஒரு முறையான திட்டமிடலே இந்த தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இனிமேல் இந்த போட்டிக்குள் இந்தியா வருமேயானால் அதற்கு பெருமளவில் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே உண்டு. ஒரு போட்டியில் மட்டும் ஜெயித்த பாகிஸ்தான் அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவினால் இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.

Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை. பாகிஸ்தான் அணி அனைத்து அணிகளையும் புரட்டி எடுத்து வருகிறது. இனிவரும் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் மட்டுமே மோத இருக்கிறது. ஏதாவது ஒன்றில் வெற்றி பெறுமேயானால் எந்த சங்கடமும் இன்றி எளிதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும்.

சரி நடப்பது நடக்கட்டும். இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இரண்டு பேர் பார்க்கப்படுகிறார்கள். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரிஷப் பண்ட தான் அந்த இரண்டு பேரும். இவர்களின் அசால்ட்தனமான ஆட்டம் இந்திய அணிக்கு எதிராக திரும்பி தோல்வி வரை கொண்டு சென்றது.

Also Read: தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முகியமான ஆட்டத்தில் அர்ஷ்தீப் கடைசி நேரத்தில் தவறவிட்ட கேட்ஸ் வாய்ப்பு இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஆட்டவும் தோல்விக்கு ஒரு காரணமாக மாறியுள்ளது.

இந்திய அணிக்கு அடுத்தடுத்து பல தொடர்கள் இருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த தவறை எல்லாம் சரி செய்தால் இந்திய அணி பல கோப்பைகளை வெல்லும் என்பதில் ஆச்சரியமில்லை. 20 ஓவர் உலகக்கோப்பை நெருங்கியுள்ளது. ஆசிய கோப்பையின் தோல்விகள் இந்திய அணிக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Also Read: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!