பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட மாஸ் ஹீரோ.. பிரச்சனையிலிருந்து தப்பிக்க பிளான் போடும் நடிகர்

தற்போதைய கோலிவுட்டின் பரபரப்பு செய்தியே அந்த இரு படங்களுக்கும் நடக்கும் மோதல் பற்றி தான். பல வருடங்களுக்குப் பிறகு வரும் பண்டிகை தினத்தன்று மிகப் பெரிய இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் ஒன்றாக மோத இருக்கிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கும் நிலையில் மாஸ் ஹீரோவின் படத்திற்கு சில பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

அவரின் முந்தைய படத்தை வாங்கி வெளியிட்ட அந்த பெரிய நிறுவனம் இந்த படத்தையும் வாங்கும் முயற்சியில் இருந்தது. ஆனால் ஹீரோ எக்காரணம் கொண்டும் அங்கு படத்தை கொடுத்து விடக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறார். இதனால் கொதித்துப்போன அந்த பெரிய தயாரிப்பாளர் போட்டி நடிகரின் திரைப்படத்தை வாங்கி அதே நாளில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் கொடுத்துவிட்டார்.

Also read:மகுடிக்கு மயங்கிய பாம்பான வாரிசு நடிகை.. திட்டம் போட்டு கவுத்தியதால் கதி கலங்கிய அப்பா

எப்படியும் நண்பர் நடிகரின் படம் வெளியாகாது என்று நம்பிக்கையோடு இருந்தால் மாஸ் ஹீரோவுக்கு இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேவையில்லாமல் பெரிய இடத்தை பகைத்துக் கொண்டோமே என்ற கவலையில் அவர் இப்போது இருக்கிறாராம்.

ஏனென்றால் டாப் நடிகரின் திரைப்படத்திற்கு தான் தற்போது அதிக தியேட்டர்கள் புக் ஆகும் நிலைமை இருக்கிறதாம். மொத்த அதிகாரமும் பெரிய இடத்தின் கையில் இருப்பதால் தற்போது நடிகரின் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. இதன் மூலம் வசூலும் குறையும் என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

Also read:டூப் போட வந்து ஹீரோயின் ஆன நடிகை.. ரசிகர்களை கிறங்கடித்த 90ஸ் கிட்ஸின் கவர்ச்சி கன்னி

ஏற்கனவே ஒரே நாளில் படங்கள் வெளிவருவதால் கலெக்சன் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டது. இதில் தியேட்டர் பிரச்சனையும் இருக்கவே நடிகர் ரொம்பவும் நொந்து போய் இருக்கிறாராம். படத்தின் உரிமையை பல கோடிக்கு கொண்டு செல்லவே நடிகர் பல உள்குத்து வேலைகளை பார்த்தார்.

இதில் இந்தப் பிரச்சனையும் சேர்ந்துள்ளது அவரை பலத்த யோசனையில் வைத்திருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு படங்களின் தேதியும் இன்னும் வெளியாகவில்லை. அவர் அறிவிக்கட்டும், இவர் அறிவிக்கட்டும் என்று இரண்டு தரப்பும் காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மாஸ் ஹீரோ எப்படி படத்தின் வசூலை அதிகப்படுத்துவது என்றும், இந்த பிரச்சனையை சமாளிப்பது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனையில் இருக்கிறாராம்.

Also read:அந்தரங்க தேவைக்காக 2ம் திருமணம் செய்த நடிகர்.. தள்ளாத வயதிலும் அப்படி ஒரு சுகம் தேவைதானாம்

- Advertisement -