சென்டிமென்ட்டா அவர் வேணும்னு அடம் பிடித்த மாதவன்.. உயிர் நண்பரை படத்திலிருந்து கழட்டி விட்ட ஏ எல் விஜய்!

A L Vijay avoid music director GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம், மதராசபட்டினம், தலைவா போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஏ எல் விஜய் அவர்கள், கடந்த பொங்கலை ஒட்டி  வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

அயலான், கேப்டன் மில்லர் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன் மோதிய மிஷன் சாப்டர் ஒன் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. 

தற்போது ஏ எல் விஜய், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் மாதவன் மற்றும்  கங்கனா ரனாவத்தை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படம் திரில்லர் மற்றும் உளவியல் ரீதியான கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.  

இயக்குனர் ஏ எல் விஜய்க்கு எப்போதுமே ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது ஜீவி பிரகாஷ் குமார் தான்.

இவர்கள் கூட்டணியில் தெய்வத்திருமகள், சைவம், தலைவா, மதராசபட்டினம் போன்ற படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகின. கடைசியில் உருவான மிஷன் சாப்டர் ஒன் படத்திற்கும் ஜிவி பிரகாஷ்குமாரே இசையமைப்பாளர். 

அப்படி இருக்க தற்போது ஏ எல் விஜய், இசைப் பணியில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு பதிலாக இசையமைப்பாளர் சாம் சி எஸ் என்பவரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. 

ஏ எல் விஜய் யை விட்டு விலகும் ஜீவி

ஏ எல் விஜய் படம் என்றாலே உயிர் நண்பர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் நிரவ் ஷா இருவரும் கட்டாயம் இருப்பார்களாம். ஏன் இந்த இசையமைப்பாளர் மாற்றம்? என்று பலரும் இயக்குனரை கேள்வியால் துளைத்து வருகின்றனர். 

நிலைமை இவ்வாறு இருக்க பாலிவுட்டில் இருந்து கம்பேக் கொடுத்து இருக்கும் மாதவனோ எனக்கு மின்னலே திரைப்படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் ஹிட் தான்.

சென்டிமென்ட்டா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஹாரிஸை இப்படத்தில் இசையமைக்க வைக்கலாமா என்று இயக்குனரை தாஜா பண்ணி வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்