தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு கண்டு எப்போதுமே மொத்த கோலிவுட் உலகமும் ஸ்தம்பித்து கொண்டிருக்கிறது. இசை வெளியீட்டு விழாவாக இருக்கட்டும், வெற்றி கொண்டாட்டமாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் ஒரு திருவிழாவைப் போல அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதுவும் முதல் நாள் ரிலீஸ் அன்று ஒட்டுமொத்த தமிழகமும் ஒரு திருவிழா கோலம் கொண்டிருக்கும்.

இது அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்து தொடங்கி இப்போது 40 வருடங்களுக்கும் மேலாக நிலைத்து வருகிறது. ஒரு நடிகருக்கு இத்தனை வருடங்களாக அதே வரவேற்பு மற்றும் கொண்டாட்டங்கள் இருப்பது ரஜினிக்கு மட்டும் தான். மேலும் ஒரு படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் வில்லன் நடிகர்கள் ரொம்பவே தயங்குவார்கள். அதற்கு காரணமும் அவருடைய ரசிகர்கள் தான்.

Also Read:மனைவியால் எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ்.. ரஜினிக்கு கிடைக்காத அந்த பாக்கியம்

உதாரணத்திற்கு ஏதாவது ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மரியாதை இல்லாமல் பேச வேண்டும் அல்லது அடிப்பது போல் நடிக்க வேண்டும் என்றால் வில்லன் நடிகர்கள் ரொம்பவே பயப்படுவார்கள். படம் ரிலீஸ் ஆகி ரஜினி ரசிகர்கள் இந்த காட்சியை பார்த்த பிறகு எங்களால் வெளியில் தலை காட்ட முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனந்தராஜ், சரத் பாபு, ரகுவரன் போன்ற முன்னணி நடிகர்களே ரஜினியை படத்தில் எதிர்க்க தயங்கும் பொழுது ரஜினிக்கு வில்லியாக கலக்கியவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கேரக்டர். அந்த படம் நடிக்கும் பொழுது மொத்த யூனிட்டுமே படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஊரில் இருக்காதீர்கள் என்று அவரை எச்சரித்து இருக்கிறார்கள்.

Also Read:இரண்டு பக்கமும் ரஜினிக்கு கொடுக்கும் நெருக்கடி.. ரேசில் இருந்து விலகும் உலக நாயகன்

படையப்பா ரிலீஸ் இன் போது ரம்யா கிருஷ்ணனும் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். நிறைய தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் ஸ்கிரீனையே கிழித்து விட்டார்களாம். ரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

அப்போது இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் இன்று வரை இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இவர் நடித்திருந்தாலும் இன்றுவரை ரம்யா கிருஷ்ணன் என்றால் அது படையப்பாவின் நீலாம்பரி என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறது.

Also Read:ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

 

- Advertisement -