திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஹீரோ.. சிம்பு இடத்திற்கு வந்த ஆபத்து

அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அவருக்கு பெரும் வெற்றியை தேடி கொடுத்தது. தற்போது அவர் நடித்துள்ள பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இருந்தாலும் சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மீண்டும் சிம்பு பழையபடி தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அதாவது அவர் தன்னுடைய சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனாலேயே அவர் கைவசம் இருந்த பட வாய்ப்புகளும் நழுவி கொண்டிருக்கிறது.

Also read: சிம்பு படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகரின் மனைவி.. திருமணம், குழந்தைக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

அந்த வகையில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தின் வாய்ப்பு தற்போது ஒரு இளம் ஹீரோவுக்கு சென்றிருக்கிறது. கோமாளி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தாலும் லவ் டுடே திரைப்படம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் முன் கொண்டு சேர்த்தது. அதை தொடர்ந்து தற்போது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.

அதில் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் திரைப்படமும் ஒன்று. அதை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அசிஸ்டன்ட் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

Also read: என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

இப்படி தற்போது அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது. இது தவிர இன்னும் சில திரைப்படங்களில் நடிக்கவும் அவர் பேச்சுவார்த்தை நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது பிரதீப் தற்போது திரையுலகில் சத்தம் இல்லாமல் வளர்ந்து வரும் ஒரு ஹீரோவாக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் அவர் சிம்புவின் திரைப்படத்தை கைப்பற்றி இருப்பது தான் கோடம்பாக்கத்தில் சூடான செய்தியாக பேசப்பட்டு வருகிறது. மேலும் லவ் டுடே தந்த வெற்றி அவரை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பிரதீப் இன்னும் சில காலங்களிலேயே முன்னணி அந்தஸ்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: விஜய்க்கு சிம்பு கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதே சந்தோஷத்தை வாரிசு நடிகருக்கு திருப்பிக் கொடுத்த எஸ்டிஆர்

- Advertisement -

Trending News