தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று மோசம் போன வெங்கட் பிரபு.. பிராண்டை மாற்றிய விஜய்க்கு விழுந்த பலத்த அடி

A heavy blow fell to Vijay who changed the brand in GOAT Movie: தமிழ் சினிமாவை ஆதிக்கம் செலுத்தி வரும் தளபதி, அரசியலில் கால் பதித்ததால் சினிமாவில் கவனம் செலுத்துவதில்லை என்பது போன்ற விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தளபதி அரசியல் வருகையை அறிவித்த உடனே இன்னும் ஒத்துக்கொண்ட ஒன்று, இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களத்தில் இறங்க உள்ளார் என்ற செய்தியை அறிவித்தார்.

தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கோட் திரைப்படத்தின் விசில் போடு என்ற பாடல் வெளியானது.

தளபதியின் ஓப்பனிங் சாங்கை மங்காத்தா ரேஞ்சுக்கு வெகுவாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த பாடலில், வரிகள் சரியில்லை, இசைஅமைப்பு சரியில்லை, என்பது போன்ற பல்வேறு வகையான எதிர்மறை விமர்சனங்கள் வலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரது தம்பி யுவன் சங்கர் ராஜா தான். ஆரம்பம் முதல் இன்று வரை வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசை யுவன் சங்கர் ராஜா தான்.

அதிலும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் இணைந்த மங்காத்தா திரைப்படத்திற்கு தீம் மியூசிக் முதல் பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார் யுவன் சங்கர் ராஜா.

விசில் போடு பாடலை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

யுவன் சங்கர் ராஜா தான் மியூசிக் டைரக்டராக வேண்டும் என்று படத்தை ஒப்புக்கொள்ளும் போதே தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தாராம் வெங்கட் பிரபு.

இன்றைய சூழலில் தளபதி மற்றும் அனிருத் காம்போ ட்ரெண்டிங்கில் இருக்க வெங்கட் பிரபுவின் வேண்டுகோளுக்காக தனது பிராண்டை மாற்றி அமைத்தார் விஜய். தளபதியின் போதாத காலம் எல்லாம் தலைகீழானது.

யுவன் சங்கர் ராஜா அவுட் டேட்டட் ஆகிவிட்டார். அவரிடம் டெடிகேஷன் இல்ல! கம்போசிங் கூப்பிட்டா வருவதில்லை! சாங் ரெக்கார்டிங் எல்லாத்துக்குமே சரிவர ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது போன்று  புகார்கள் வெங்கட் பிரபுவின் காதுக்கு வந்த வண்ணம் இருந்தது.

விஜய் படம் வெங்கட் பிரபுவிற்கு ஒரு ட்ரீம் ப்ராஜெக்ட் தான். ஆனால் அதை அவரது தம்பி யுவன் சங்கர் ராஜாவிடம் கொடுத்து டோட்டலா வேஸ்ட் ஆக்கிவிட்டார் என்று விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.

எப்போதுமே படத்தை முடித்துவிட்டு ரிலீசின் போது பிரச்சனையை எதிர்கொள்ளும் தளபதி, தற்போது பாடல்  வெளியிட்ட போதே இசை சரியில்லை, வரிகள் சரியில்லை என்று பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்