சினிமா நடிகைகள் பெரும்பாலும் சொந்த வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகின்றனர். அதிலும் ஒன்றரை வயதில் பிரபல இயக்குனரின் கண்ணில் பட்டதால் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வந்தவர் தான் அந்த நடிகை. அதன்பின்பு ஆறு வயதில் டாப் நடிகையுடன் சேர்ந்து நடித்தார். அந்த படத்திற்கு பிறகு தான் இவரது சினிமா வாழ்க்கை ஏறு முகத்தில் சென்றது.
இதனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டி தூக்கி இவர், பல படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி அசர வைத்தவர். அந்தக் காலகட்டத்தில் கிசுகிசுக்கள் மற்றும் மீ டூ பிரச்சனை தலை விரித்தாடியது. பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் இரவு நேரத்தில் இவரை தூங்க விடாமல் டார்ச்சர் செய்து இருக்கின்றனர்.
Also Read: 15 வயதிலேயே நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்த நடிகை
வீட்டு கதவை தட்டி தகாதவாறு பேசுவதும், தவறான எண்ணங்களில் கூப்பிடுவது என பல இன்னல்களுக்கு ஆளானார். இவருக்கு இவரது அப்பாவும் இரண்டு அண்ணங்களும் துணையாக இருந்ததால் அந்த விஷயத்தில் சிக்காமல் தப்பினார். அப்படி இருந்தும் போயும் போயும் இவரை விட இரண்டு மடங்கு வயதில் அதிகமாக இருந்த அக்கட தேசத்து வில்லனை காதலித்து 17 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
அந்த நடிகருக்கு இந்த கிளாமர் குயின் 4வது மனைவி என்பது கொடுமையின் உச்சம். இந்த கவர்ச்சி கன்னி திருமணமான பிறகு அவருடைய வீட்டிற்கு சென்ற பின்பு தான் இந்த நடிகையை வயதில் அந்த நடிகருக்கு ஒரு மகன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் வில்லன் நடிகர் உடன் சேர்ந்து குடும்ப நடத்தி ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.
Also Read: அத்துமீறி கண்ட இடத்தில் கை வைத்த நடிகர்.. பளார் என்று அரைவிட்ட நடிகை
ஆனால் ஒரு சில வருடத்திலேயே விவாகரத்தும் பெற்று இப்போது தன்னுடைய மகனுடன் தனித்து வாழ்கிறார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது சரியாக தன்னுடைய வாழ்க்கையை தேர்வு செய்யாததால் தான் சினிமாவிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் இவரால் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது என்று இப்போது சோசியல் மீடியாவில் குமுறுகிறார்.