சைடு கேப்பில் விஜய்க்கு ஏற்பட்ட மரண பயம்.. புத்தியை கத்தி போல் தீட்டி மலேசியாவுக்கு ஓடும் தளபதி

Actor Vijay: பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் செய்வதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஆடியோ லான்ச் இந்த முறை மலேசியாவில் நடத்தலாம் என்று படக்குழு முடிவெடுத்து இருக்கிறார்கள்.

Also read: விஜய் சுட்டு சூப்பர் ஹிட்டான 5 தெலுங்கு படங்கள்.. மகேஷ்பாபு படத்தையே விடாமல் துரத்தும் தளபதி

ஆனால் ஆடியோ லான்ச் முதலில் மதுரையில் தான் நடக்கப் போவதாக இருந்தது. இதனால் அங்கே ஐம்பதாயிரம் பேர் வந்து செல்லும்படி எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக செய்து வந்தார்கள். இந்நிலையில் விஜய்க்கு சைடு கேப்பில் திடீரென்று மிகப்பெரிய மரண பயம் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது ரசிகர்கள் அனைவரும் ஆர்வக்கோளாறாக ஆடியோ லாஞ்சில் எதையாவது செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மதுரையில் ஆடியோ லான்ச் நடந்தால் ரசிகர்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டார்கள். வருங்கால முதல்வர், எங்கள் விடிவெள்ளி, வருங்கால பிரதமர் என்றெல்லாம் பிளக்ஸ் பேனர் அடித்து சந்தி சிரிக்க வைத்து விடுவார்கள்.

Also read: விஜய்யின் வாழ்நாள் சாதனையை செஞ்சு விட்ட ஜெயிலர்.. ரஜினியின் அசர வைக்கும் ரெக்கார்ட்

அப்படி மட்டும் நடந்தால் மொத்த காரியமும் சொதப்பி விடும் என்று பீதியில் விஜய் சரியான நேரத்தில் புத்தியை கட்டி போல் தீட்டி மலேசியாவிலேயே ஆடியோ லான்ச் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து விட்டார். ஒருவேளை மதுரையில் ஆடியோ லான்ச் வைத்திருந்தால் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தால் படம் ரிலீஸ் நேரத்தில் நிச்சயமாக பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு ஏற்படும்.

இதையெல்லாம் வேண்டாம் என்று முடிவெடுத்து மலேசியா பக்கம் தெரித்து ஓட இருக்கிறார். ஆக மொத்தத்தில் தற்போது விஜய் மனதில் இருப்பது அனைத்தும் லியோ படம் நல்லபடியாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளியாகி வசூலை அள்ள வேண்டும் என்பதுதான். அதற்காக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து கவனமாக செய்து வருகிறார்.

Also read: விஜய் மாதிரி யார் நாளும் நடிச்சிடலாம்.. ஆனா அஜித்தின் இந்த கேரக்டர் நடிக்கவே முடியாது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்