ஸ்லிம்மானதால் கிருத்திகாவை திருமணம் செய்துகொள்ள அடம்பிடித்த ரசிகர்.. புகைப்படம் வெளியிட்டு பதிலடி

வெள்ளித்திரையில் இருந்து பின்னர் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் நடிகை கிருத்திகா. இதனைத் தொடர்ந்து ஆனந்தம், முந்தானைமுடிச்சு, செல்லமே எனப் பல சன் டிவி சீரியலில் நடித்து கலக்கியவர் நடிகை கிருத்திகா. இவர் அண்ணாமலை, ஆண்டாள் அடிமை படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.

அதைத் தொடர்ந்து ‘பேசாத கண்ணும் பேசுமே’ என்னும் படத்தில் குணாலின் தங்கையாக நடித்தார். மேலும் இவர் நடிப்புத்திறன் மட்டுமல்லாமல் அற்புதமாக நடனமாடும் திறனையும் கொண்டிருந்ததால் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்னும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிக் கொணர்ந்தார்.

இதையடுத்து நடிகை கிருத்திகா, அருண் சாய் என்பவரை திருமணம் செய்தார். தற்பொழுது இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர் திருமணம் ஆனதால் 3 வருடம் திரைத்துறையில் இருந்து விலகி வீட்டுப் பொறுப்புகளை அழகுற கவனித்து வந்தார். மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு நன்றாக உடல் பருமனாகி விட்டார்.

மீண்டும் நடிக்க பல வாய்ப்புகள் வர நிறைய ஒர்க்கவுட் செய்து ஸ்லிம்மாக மாறி இப்ப ஜம்முனு பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்வதும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருவார்.

இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக இவரின் ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ப்ளீஸ்’ என்று ப்ரொபோஸ் செய்திருப்பது இணையத்தையே அதிர வைத்துள்ளது. இதற்கு நேக்காக நடிகை கிருத்திகா தன் மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு தான் திருமணமானவர் என்பதை உணர்த்தும் வகையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் ‘சின்னத்தம்பி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து நன்றாக பிரபலமடைந்தார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். தற்பொழுது சன் டிவியில் ‘பாண்டவர் இல்லம்’ மற்றும் ‘சுந்தரி’ சீரியலிலும் நடித்து வருகிறார்.

kirthika-serial-actress
kirthika-serial-actress
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்