சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஏஆர் ரகுமான் இடத்தை பிடித்து விட்ட பிரபல இசையமைப்பாளர்.. கைவசம் உள்ள 6 பிரம்மாண்ட படங்கள்

பொதுவாகவே ஒரு படம் மக்களிடம் ஈசியாக போய் சேர்வது முதலில் அந்தப் படத்தில் உள்ள பாடல்கள். அப்படிப்பட்ட அந்த பாடலை மெழுகு ஊட்டுவதற்கு ரொம்ப முக்கியம் இசை என்றே சொல்லலாம். அந்த வகையில் இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தியவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.

இவர் ரோஜா படத்திலிருந்து இப்போது வரை 145க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவரை, குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்து இவருடைய இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார். இவர் இசை அமைத்தாலே அந்த படங்கள், பாட்டு ஹிட் ஆகிறது என்ற நிலைமைக்கு இவர் போய்விட்டார்.

Also read: கழட்டி விடப்படும் ஏஆர் ரகுமான்.. ஆஸ்கர் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அப்படிப்பட்ட இவர் கையில் இப்பொழுது 6 பிரம்மாண்ட படங்கள் வரிசையாக இருக்கிறது. அந்த இசையமைப்பாளர் தான் அனிருத். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஜெய்லர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் 170வது படத்திற்கும் இவர்தான் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்பு கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் மிகப் பிரமாண்ட படமான இந்தியன் 2க்கும் இவர் தான் இசையமைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்து அந்த பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி பறந்தது.

Also read: அனிருத் இசையையே அட்டை காப்பி அடித்த “தீ தளபதி” தமன்.. மொத்த உழைப்பும் வீணா போச்சே என புலம்பும் விஜய்

இதனை அடுத்து அஜித்தின் AK62 மற்றும் தனுஷின் D50 படத்தையும் இவர் தான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவரும். இப்படி தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம்AK62 வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்.

தற்போது இவர் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா என அனைத்திலும் கலக்கி வருகிறார். அதிலும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மற்றும் விஜய் தேவரகொண்டா படங்களிலும் பிசியாக ரவுண்டு கட்டி வருகிறார்.

Also read: அபரிதமான வளர்ச்சி காட்டும் அனிருத்.. இப்பவே அவர் இடத்திற்கு துண்டை போடும் சின்னத்தம்பி

- Advertisement -

Trending News