என் சேலையை இழுத்ததும் விஜய்யை அறைந்து விட்டேன்.. ஃபிளாஷ்பேக் சொன்ன பிரபல ஹீரோயின்

Thalapathy Vijay: நடிகர் விஜய் இன்றைய கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். விஜய்க்கு இந்த வெற்றியை கண்ணிமைக்கும் நேரத்தின் கிடைத்தது கிடையாது. பிரபல இயக்குனரின் மகனாக சினிமாவுக்குள் நுழைந்து இருந்தாலும் அவர் சந்தித்த அவமானங்கள் அதிகம். விஜய் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது அவர் தோற்றத்தை வைத்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் முதலில் வந்தன.

பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. விஜய்யின் நடனம் எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்குமோ, அந்த அளவுக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் சில நடிகைகளின் கெமிஸ்ட்ரியும் அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வரிசையில் இருந்த ஒரு ஹீரோயின் தான் இந்த ஃபிளாஷ்பேக் கதையை சொல்லி இருக்கிறார்.

விஜய் – திரிஷா, விஜய் – சிம்ரன், விஜய் – ஜோதிகா, விஜய் – அசின் என்ற அட்டகாசமான காம்போவுக்கு முன்னாடியே விஜய்க்கு பெஸ்ட் பேராக இருந்தவர் தான் நடிகை சங்கவி. இவர் விஜய் உடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.

விஜய் மற்றும் சங்கவி இணைந்து நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. வீட்டில் ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் என்ற ரொமாண்டிக் பாடல் வரும். இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்த விஷயத்தை தான் சங்கவி பகிர்ந்து இருக்கிறார்.

அந்த காட்சியில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே வரும் பொழுது விஜய் சங்கவியின் புடவையை பிடித்து இழுக்க வேண்டும். அப்போது சங்கவி விஜய்யை பளார் என்று அறைவது போல் படமாக்கப்பட திட்டமிட்டிருந்திருக்கிறது. இது பலமுறை டேக் எடுத்ததால் சங்கவியின் புடவை முந்தானையின் நுனியில் நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

சங்கவி, நெருப்பு வைத்த பயத்தில் விஜய் புடவையை இழுப்பதற்கு முன்பே பளார் என்று உண்மையாகவே அறைந்து விட்டாராம். அதற்கு விஜய் அடித்தால் காதில் சத்தம் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் முதல் முதலாக அனுபவிக்கிறேன் என்று சொன்னாராம். பல வருடங்கள் கழித்து தற்போது இந்த சுவாரஸ்யமான விஷயத்தை சங்கவி பகிர்ந்திருக்கிறார்.