ரஞ்சித், மாரி செல்வராஜ் லிஸ்டில் சேர்க்கப்பட்ட இயக்குனர்.. ஜாதிய பிற்போக்கு தனத்தை படங்களில் சொருகிய பலே கெட்டிக்காரர்

Mari Selvaraj: சினிமா என்பது மதம், மொழி, இனத்தை சார்ந்தது அல்ல என வெளிப்படையாக சொல்லப்படுகிறது. ஆனால் சினிமாவில் எல்லாவிதமான பிரிவினை வாதமும் இருக்கத்தான் செய்கிறது.

இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் படங்கள் வந்த பிறகு தான் தமிழ் சினிமாவில் ஜாதி பற்றி அதிகமாக பேசப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி பார்த்தால் அவர்களுக்கு முன்னால் யாருமே படங்களில் ஜாதி பேசவில்லையா என்ற கேள்வி எல்லோருக்குமே வர வேண்டிய ஒன்று.

பண்ணையார், நாட்டாமை, கவுண்டர், எஜமான் போன்ற வார்த்தைகள் எல்லாம் தமிழ் சினிமா படங்களில் அதிகமாக கேள்விப்பட்ட ஒன்றுதான். அதாவது படத்தின் ஹீரோ ஆதிக்க இனத்தை சேர்ந்தவராக இருப்பார்.

கீழ்தட்டில் இருந்து வரும் ஒருவன் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதுதான் அந்த ஹீரோவின் பெரிய வேலையாக இருக்கும். நாட்டாமை, சின்ன கவுண்டர் பஞ்சாயத்து தான் அந்த கிராமத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் வசனங்களும் வந்திருக்கும்.

அப்போ இதெல்லாம் ஜாதி படங்கள் கிடையாது என்று சொல்ல முடியுமா. ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்கள் ஹீரோவாக நல்ல விஷயங்கள் செய்யும் பொழுது இதுபோன்ற கூக்குரல் தமிழ் சினிமாவில் எழவில்லை. அதுவே, அடித்தட்டு மக்கள் தங்களுடைய உரிமைக்காக போராடியதை எடுத்துச் சொன்னால் அது ஜாதிய படங்கள் ஆகிவிடுகிறது.

பலே கெட்டிக்கார இயக்குனர்

இது போன்ற படங்களை நிறைய இயக்குனர்கள் எடுத்திருக்கிறார்கள். இப்ப அந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் தான் இயக்குனர் ஹரி. தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களுக்கு பேர் போனவர் ஹரி. சண்டை காட்சிகள் நிறைந்த படத்தை பார்க்க விரும்புவார்கள் இன்று வரை ஹரியின் படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

ஆனால் அவருடைய படத்தில் சில நுட்பமான விஷயங்களை நாம் நிறைய இடங்களில் பார்க்கத் தவறி இருக்கிறோம். அவர் இயக்கிய எல்லா படங்களிலும் வரும் ஹீரோ முக்கியமான ஆதிக்க இனத்தை சேர்ந்தவராகத் தான் இருப்பார்.

ரோட்டில் தப்பு செய்றவன இழுத்து போட்டு அடித்து, மிடுக்கான வசனம் பேசிவிட்டு போவார். ஐயா படத்தில் அவர் எந்த இரண்டு சாதியை பற்றி பேசுகிறார் என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருப்பார்கள். சிங்கம் படத்தில் சூர்யாவின் அப்பா, ஊரில் ரொம்ப பெரிய ஆளாக இருப்பார்.

அவருடைய மகன் சூர்யா போலீஸ் ஸ்டேஷன் வைத்து கட்டப்பஞ்சாயத்து பண்ணி கொண்டு இருப்பார். தாமிரபரணி படத்திலும் பிரபு மற்றும் விஜயகுமாரை ஊருக்கே பெரியவர்கள் ஆகவும், கட்ட பஞ்சாயத்து பேசுபவர்கள் ஆகவும் தான் காட்டி இருப்பார்.

அதேபோன்று கோவில் படத்தில் இரண்டு மதத்தை சேர்ந்த படம் என்றாலும், ராஜ்கிரண் அவருடைய கூட்டத்திற்கு பெரிய தலைவராக இருப்பார். அதேபோல் நாசர் அவர் சேர்ந்த சமூகத்திற்கு பெரிய ஆளாகத்தான் இருப்பார்.

மொத்தத்தில் ஏதோ ஒரு வகையில் ஹரி இந்த ஜாதிய பிற்போக்கு தளத்தை தன்னுடைய படத்தில் சொருகிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் அதை மக்கள் கண்டுபிடிக்காத அளவுக்கு செய்ததுதான் பயங்கரமான கெட்டிக்காரத்தனம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்