ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெயிக்கணும்னா கமல் சார் போல மாறுங்க.. பிரபல இயக்குனருக்கு சவுக்கடி

உலகநாயகன் கமலஹாசன் தற்போதும் இளவயதில் உள்ளது போல அதே எனர்ஜியுடன் சுற்றி சுற்றி வேலை பார்த்து வருகிறார். மேலும் அரசியல், பிக் பாஸ், சினிமா என மூன்றிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வசூல் வேட்டை ஆடியது.

நான்கு வருடங்களாக கமலின் படங்கள் வெளியாகாத நிலையில் இப்படிதான் ஒரு தரமான கம்பேக் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இதுவரை கமலின் திரைவாழ்க்கையில் இந்த அளவுக்கு எந்த படங்களும் வசூல் சாதனை படைத்தது இல்லை.

கமல் இந்த வயதிலும் இப்படி ஒரு மிகப்பெரிய வெற்றி கொடுப்பதற்கான காரணம் தற்போது உள்ள ட்ரெண்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது இப்போது உள்ள இளம் தலைமுறை உடன் கூட்டணி போட்டுயுள்ளார். அதுவும் படத்தின் திரைக்கதை மற்ற விஷயங்களில் கமல் தலையிடவே இல்லையாம்.

அனிருத், லோகேஷ் கனகராஜ் என தற்போது யார் டிரெண்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்த காயை நகர்த்தி வருகிறார் கமல். இதனால் தான் கமல்ஹாசனால் மாபெரும் வெற்றியை கொடுக்க முடிந்தது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த லிங்குசாமி தி வாரியர் படத்தின் மூலம் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது லிங்குசாமி தன்னுடைய ஆரம்பத்தில் வேலை பார்த்த அதே கூட்டணியுடன் தற்போதும் பயணித்து வருகிறார். அதாவது பத்து வருடங்களுக்கு முன் வேலை செய்தவர்களை சற்றும் மாற்றாமல் அவர்களுடன் கூட்டணி போட்டு வருவதால் லிங்குசாமியால் வெற்றிப்படம் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் தற்போது உள்ள சினிமா பல புதிய டெக்னாலஜிகளை கொண்டு ரசிகர்களை பிரமிக்கச் செய்த வருகிறது. அதை நன்கு புரிந்துகொண்ட கமல் தற்போது உள்ள டிரென்ட் செட்டுக்கு ஏற்றவாறு தனது கூட்டணி அமைத்த ஹிட் கொடுத்து வருகிறார். ஆனால் லிங்குசாமி இதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஹிட் படம் கொடுக்க முடியும்.

- Advertisement -

Trending News