பிட்னெஸ் தகுதியோடு களமிறங்கும் குட்டி புலி.. ஆட்டம் காணும் ஐபிஎல் அணிகள்

IPL 2024: மார்ச் மாதம் வந்தாலே ஐபிஎல் ஃபீவர் தொடங்கி விடும். கடந்த வருடம் முழுக்க இந்த ஐபிஎல் போட்டி தான் தோனியின் கடைசி போட்டி என மனகுழப்பத்திலேயே முழுவதுமாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. அது மட்டுமில்லாமல் சொல்லி வைத்தது போல் கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை கைப்பற்றியது. இதனால் அந்த அணியிடமிருந்து எப்படியாவது மறுபடியும் கோப்பையை பெற்று விட வேண்டும் என மற்ற அணிகள் தீவிர போட்டியில் களம் காண்கிறார்கள்.

இந்த வருடம் யார் கோப்பையை கைப்பற்றுவார் என்ற விவாதம் இப்பவே ஆரம்பித்துவிட்டது. போதாத குறைக்கு மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சும்மா இருக்க முடியாமல் ஒரு போட்டியில் ரோகித் சர்மா அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக வாய்ப்பு இருக்கிறது என்ற திரியை தூக்கி போட்டு விட்டார்.

இந்தியாவில் இருக்கும் மொத்த மீடியாவும் ஐபிஎல், கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஏலம், யார் எந்த அணியில் இருக்கப் போகிறார்கள், எந்த அணி கோப்பையை கைப்பற்ற போகிறது என்ற செய்தியை தான் கையில் எடுத்திருக்கிறது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் ஐபிஎல் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், சப்தமே இல்லாமல் குட்டிப்புலி ஒன்று பிட்னஸ் தகுதியோடு இந்த ஐபிஎல் போட்டியில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Also Read: 2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் தான் ரிஷப் பண்ட். கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் விளையாடவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ஏற்பட்ட கார் விபத்து தான். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அவருக்கு ஒரு பெரிய கார் விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட ரிஷப் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகமே சில மணி நேரங்களுக்கு நீடித்தது.

படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்து வந்தார். ரிஷப் நல்ல உடல் நலம் தேடி வருவதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஆணையம் நடத்திய சோதனையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டி மட்டுமில்லாமல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விளையாடும் அளவுக்கு உடல்நலம் தேறியிருப்பதாக தகுதி சான்றிதழை கொடுத்து இருக்கிறது.

ரிஷப் பண்ட் நல்ல உடல் நலம் தேறி இருந்தாலும், தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் என டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி முடிவெடுத்து இருக்கிறார். இதனால் இந்த ஐபிஎல் போட்டியில் அவரை பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தவும், பீல்டிங்கில் வேண்டாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்க இருக்கிறார்.

Also Read:வாயை பிளக்க வைத்த 2023 ஐபிஎல் வியாபாரம்.. சிந்தாம செதராம மொத்த கஜானாவையும் நிரப்பிய பிசிசிஐ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்