திருமணமான நடிகருடன் கோவை சரளாவுக்கு இருந்த உறவு.. ஆசை காட்டி மோசம் செய்த உச்ச நடிகர்

Kovai Sarala: சினிமாவில் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றி பெற்ற நிறைய பேருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமைவது கிடையாது. அதிலும் நடிகைகள் என்று எடுத்துக் கொண்டால் பல பேருக்கு சொல்லப்படாத காதல் கதை என்று ஒன்று இருக்கும்.

அவர்களுக்கு நெருக்கமானவர்கள், அல்லது கூட சேர்ந்து பணியாற்றியவர்கள் யாராவது ஒருவர் என் மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்த நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் ஒருவர் தான் நடிகை கோவை சரளா.

மனோரமாவுக்கு பிறகு தமிழ் சினிமா நம்பி இருக்கும் காமெடி நடிகை இவர்தான். கிளாமர், டூயட் எல்லாம் எல்லா நடிகைகளுக்கும் வந்துவிடும். ஆனால் இறங்கி காமெடி செய்வது என்பது ஒரு சிலரால் தான் முடியும். அப்படிப்பட்ட பொக்கிஷங்களில் ஒருவர்தான் கோவை சரளா.

90களின் காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து படம் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

இந்த காலகட்டத்தில் இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு அரண்மனை மற்றும் காஞ்சனா படங்களில் நடித்த சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கோவை சரளா ரொம்பவே பிடித்தமான ஒருவர். கோவை சரளா திருமணம் செய்யாமல் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு காதல் கசப்பு தான் இதற்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. இதை பற்றி அவருடன் பணிபுரிந்த இயக்குனர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற குடும்ப படங்களை எடுத்து பிரபலமானவர்தான் இயக்குனர் வி சேகர். இவருடைய படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தவர்கள்தான் கோவை சரளா மற்றும் வடிவேலு.

இந்த இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. கோவை சரளாவும் வடிவேலு இருந்தாலே படம் ஹிட் தான் என நம்பப்பட்டது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

இதற்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என சொல்லப்படுகிறது. முதலில் வடிவேலுவுடன் நடிப்பதற்கு கோவை சரளா சம்மதிக்கவே இல்லை. அதன் பின்னர் தொட்டு நடிக்க கூடாது, சில வசனங்கள் பேச கூடாது என நிறைய கண்டிஷன் போட்டு தான் நடித்திருக்கிறார்.

ஆனால் காலம் போகப் போக இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நட்பு. காதலாகவும் மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாக இயக்குனர் சேகர் சொல்லி இருக்கிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அத்தோடு இவர்கள் இணைந்து நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்