வில்லனுக்கு தான் இப்ப எல்லாம் மவுஸ் அதிகம்.. விஜய் சேதுபதிக்கு போட்டியாக களம் இறங்கும் பிரபல ஹீரோ

Vijaysethupathi: நல்லதுக்கே காலம் இல்லன்னு நான் பல சமயங்களில் நொந்து போவது உண்டு. இது எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு சரியாக பொருந்துமோ தெரியாது, இப்போதைய சினிமாவுக்கு சரியாக இருக்கும். சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து, ஹீரோயினை வில்லனிடமிருந்து காப்பாற்றும் ஹீரோவை விட, கெட்டதை ஸ்டைலாக, ஸ்மார்டாக செய்யும் வில்லனுக்கு இப்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மவுசு அதிகம்.

நடிகர் விஜய் சேதுபதி ரொம்ப சாஃப்ட்டாக ஹீரோ கேரக்டரில் நடித்து மக்கள் செல்வனாக ரசிகர்களின் மனதில் ஜெயித்தார். ஆனால் எப்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூது கவ்வும் படத்தில் மிரட்டினாரோ அப்போதுதான் அவர் ஆல் ரவுண்டராக மாறியது. பேட்ட, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இவர் காட்டிய வில்லத்தனம் தான் இன்று பாலிவுட் வரை அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

விஜய் சேதுபதி மட்டும் இந்த லிஸ்டில் இல்லை. வாலி, குஷி படத்திற்கு பிறகு ஹீரோவாக ரிட்டன் ஆன எஸ் ஜே சூர்யாவை முதலில் கண்டுகொள்ள ஆளில்லை. இந்த ஹீரோயிசம் எல்லாம் நமக்கு செட்டாகாது என்று வில்லன் கேரக்டரை கையில் எடுத்த பிறகு எஸ் ஜே சூர்யா இப்போது நிற்க நேரமில்லாமல் பிஸியாகி விட்டார். இவர்களின் வெற்றியை எல்லாம் பார்த்துவிட்டு இனி ஹீரோவாக நடித்த செட்டாகாது, வில்லனாக ஒரு கை பார்த்து விடலாம் என முடிவெடுத்து இருக்கிறார் பிரபல ஹீரோ ஒருவர்.

Also Read:டங்குவாரை பிதுக்கிய மிஷ்கின்.. விஜய் சேதுபதியால் மொத்த யூனிட்டும் போடும் கோவிந்தா

நடிகர்கள் விஜய், பிரசாந்த் வரிசையில் காதல் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக இருந்தவர் தான் பரத். பேரரசு இயக்கத்தில் இவர் தொடர்ந்து நடித்த ஆக்சன் படங்களால் மொத்தமாக அவருடைய சினிமா கேரியரே மாறிவிட்டது. வெற்றியோ, தோல்வியோ கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்களை ரிலீஸ் செய்து அவருடைய முகத்தை மட்டும் ரசிகர்கள் மறக்காத மாதிரி பண்ணிக் கொண்டிருந்தார்.

எப்படி நடித்தாலும் பரத் எதிர்பார்த்த பெரிய வெற்றி என்பது அவருக்கு கிடைக்கவே இல்லை. இனி ஹீரோவாக நடித்து எந்த பிரயோஜனமும் இல்லை என அவருக்கு தெரிந்து விட்டது போல. அதனால் தான் வில்லன் அவதாரம் எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக பரத் கமிட் ஆகிவிட்டார்.

நடிகர் கார்த்திக்கு கொம்பன் மற்றும் விருமன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் முத்தையா. இவருடைய இயக்கத்தில் தான் அடுத்து வெளிவர இருக்கும் படத்தில் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். பல வருடங்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த படம் கை கொடுக்குறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:நடிகர்களை மாட்டி விட இணைய கூலிப்படைகள் செய்யும் வேலை.. மாபியா கேங் ஆக மாற்றப்படும் வெற்றிமாறன் விஜய் சேதுபதி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்