தனுஷ், விஜய் பட்டும் திருந்தாத செயல்.. பணத்துக்காக சூர்யா எடுத்திருக்கும் அதிரடி முடிவு

பொதுவாக முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கு பல இயக்குனர்கள் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இவர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி வளர்த்து விட்டவர்களும் இவர்கள்தான். அதன் மூலமாக இவர்கள் சினிமாவிற்கு நுழைந்து தற்போது பெரிய ஹீரோவாக வலம் வந்திருக்கிறார்கள். எப்போதுமே பழசை மறக்க கூடாது என்று சொல்வதற்கு ஏற்ப இவர்களை தூக்கி விட்ட தமிழ் இயக்குனர்களை மறக்கலாமா.

ஆனால் இவர்கள் வளர்ந்து பெரிய ஆளா ஆனதற்கு பின் அதிலும் விஜய், தமிழ் இயக்குனர்களை டீலில் விட்டு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைத்தார். அதாவது விஜய் நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி தான் இயக்கினார். சரி யார் இயக்கினால் என்ன படம் நன்றாக இருந்தால் போதும் என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்தது.

Also read: ‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தையும் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி தான் இயக்கினார். இதுவும் தமிழில் அந்த அளவுக்கு எடுபடவில்லை. ஆனால் இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தனுஷ்க்கு பெரிய லாபம் ஈட்டியது. இதற்கிடையில் இவர்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது சிவகார்த்திகேயன் தான் என்றே சொல்லலாம்.

இவர் ஆரம்பித்தது தான் இத்தனைக்கும் காரணம். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் என்பவர்தான் இயக்கினார். ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய நஷ்டத்தை தான் கொடுத்தது. தற்போது இந்த வரிசையில் சூர்யாவும் இணைகிறார். இவர்கள் பட்டதை பார்த்தும் திருந்தாத சூர்யா பணத்துக்காக இந்த மாதிரி விஷயத்தில் இறங்கி விட்டார்.

Also read: வாடிவாசலுக்கு தயாராகும் காளைகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் சூர்யா

அதாவது தெலுங்கு இயக்குனரான சண்டூ மொண்டேட்டி. இந்த இயக்குனர் தெலுங்கில் கார்த்திகேயா 1,2,3 பாகத்தை எடுத்திருக்கிறார். இப்படம் அங்க மிகப் பெரிய வெற்றியை கொடுத்ததால் சூர்யா இவருடன் கூட்டணி வைக்கிறார். பிறகு இந்த இயக்குனர் சூட்டோட சூட்டாக ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி இருக்கிறார்.

அவரும் இந்த கதையை கேட்ட உடனே எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று ஒத்துக் கொண்டார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் எடுக்கப் போவதாக முடிவு செய்து இருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இவர்கள் கூட்டணி சூர்யாவுக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது.

Also read: லயோலா கல்லூரியில் பயின்ற 5 டாப் ஹீரோக்கள்.. அப்பாவை சிபாரிசுக்கு கூட்டி சென்ற ரோலக்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்