வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஓவர் டார்ச்சர் பண்ணும் ரஜினி.. நெல்சன் மாதிரி சிக்கி படாத பாடுபடும் இயக்குனர்

Rajinikanth – Nelson: தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருக்கும் அத்தனை பேருக்கும் என்னைக்காவது ஒரு நாள் ரஜினியை வைத்து படம் எடுத்து விட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ரஜினி சமீப காலமாக இளம் இயக்குனர்களை வைத்து படம் எடுத்து வருவதால் அந்த வாய்ப்பு நமக்கும் கிடைத்து விடாதா என சிலர் ஏங்கவும் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் ரஜினி பட வாய்ப்பு கிடைத்த இயக்குனர்களின் நிலைமை கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ரஜினியை வைத்து படம் இயக்கப் போகும் இயக்குனர் ஒருவர் படாத பாடு பட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ரஜினி பட ஷூட்டிங்கில் கூட நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் என ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். இதற்கு அவருடைய வயது மற்றும் ஆரோக்கிய நிலைமை ஒரு காரணம். இதைத் தாண்டி சமீப காலமாகவே ரஜினி கதை மற்றும் கேரக்டர் தேர்விலும் அதிகமாக தலையிடுவதாக சொல்லப்படுகிறது.

இதில் அதிகம் நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனவர் நெல்சன் தான். என்னதான் ரஜினி நெல்சனை டார்ச்சர் பண்ணி இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. தற்போது ரஜினியிடம் இதே போன்று தான் இயக்குனர் ஞானவேல் சிக்கி இருக்கிறாராம் ரஜினியின் 170 ஆவது படத்தை இவர்தான் இயக்குகிறார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது தற்போது இரண்டாவது கட்ட படபிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இந்த படப்பிடிப்பில் ரஜினி இதை மாத்து, அதை மாத்து என்று சொல்லி ஞானவேலை பயங்கரமாக டார்ச்சர் செய்து வருகிறாராம். இதில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார். உண்மையில் இயக்குனர் ஞானவேல் இந்த கேரக்டருக்கு வேறு ஒரு ஆக்டரை தான் தேர்வு செய்து வைத்திருந்தாராம். ஆனால் ரஜினி இந்த கேரக்டருக்கு அமிதாப் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

முன்பு எல்லாம் ரஜினி இயக்குனர்களுக்கு பிடித்த நடிகர்கள் லிஸ்டில் இருந்து வந்தார். இதற்கு காரணம் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நடித்துக் கொடுத்து போவதால் தான். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. ஜெயிலர் படத்திலிருந்து அதிகமாக படவேலைகளில் தன்னுடைய தலையீட்டை காட்டி வருகிறார்.

தலைவர் 170 அடுத்து ரஜினியை இயக்குனர் லோகேஷ் இயக்க இருக்கிறார். லோகேஷுக்கு அவர் நினைத்தபடி படம் அமைய வேண்டும், ஒரு காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ரஜினியிடம் இது செல்லுபடி ஆகுமா என தெரியவில்லை. லோகேஷிடம் மாட்டிக் கொண்டு ரஜினி முழிக்க போகிறாரா, இல்லை ரஜினியிடம் மாட்டிக் கொண்டு லோகேஷ் முழிக்க போகிறாரா என படப்பிடிப்பு ஆரம்பித்தால் தான் தெரிய வரும்.

- Advertisement -

Trending News