அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்

சினிமாவில் இயக்குனர்கள் வந்த புதிதில் டாப் நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. படிப்படியாக தனது திறமையை நிரூபித்த பிறகு தான் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் வந்த புதிதிலேயே ஒரு இயக்குனர் உச்ச நடிகர்களின் படத்தை இயக்கினார்.

ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்தாலும் தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்கிறார். ஒரு காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தாலும் தொடர் தோல்வி படத்தை கொடுத்ததால் முன்னணி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாத அளவுக்கு போய் உள்ளனர்.

Also Read :ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

இவர் அஜித்தின் படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய், விக்ரம் என டாப் நடிகர்களுடன் இயக்கும் வாய்ப்பு இந்த இயக்குனருக்கு கிடைத்தது. அதாவது கிரீடம் படத்தின் மூலம் தமிழில் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஏ எல் விஜய்.

இதைத்தொடர்ந்து விக்ரமின் தாண்டவம் மற்றும் விஜய்யின் தலைவா போன்ற படங்களை ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்த படங்கள் என்றால் அது தெய்வத்திருமகள் மற்றும் மதராசபட்டினம் படம் தான்.

Also Read :நான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல் விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு!

இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வெற்றி பெறவில்லை. இவ்வாறு ஏ எல் விஜய் இயக்கிய அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்போதும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இப்போது கூட அருண் விஜயின் ஒரு படத்தை விஜய் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படத்திற்கு அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏஎல் விஜய் அளவிற்கு தமிழ் சினிமாவில் படங்கள் ஓடமால் இவ்வளவு நாள் எந்த இயக்குனரும் நிலைத்து நின்றதில்லை.

Also Read :தலைவா 2 எப்போது வரும்?.. ரசிகர்களின் கேள்விக்கு ஏஎல் விஜய்யின் பதில்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -