ஒரு கோடி சம்பளம் கொடுத்தது சும்மாவா.. தமன்னாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இயக்குனர்

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர். தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது தமன்னாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. சமீபத்தில் தமன்னாவை பற்றிய சர்ச்சையான விஷயம் வெளியாகி இருக்கிறது.

இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில கதாநாயகிகளே தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை எடுத்து நடிக்கிறார்கள். மற்ற நடிகைகள் எல்லாம் பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் கிளாமர் என தங்களுடைய பாதையை ஒத்துக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் இருப்பவர்தான் நடிகை தமன்னா.

Also Read:விஜய் சேதுபதிக்கு தான் அந்த வேலைனா.. தமன்னாவும் அதையே செய்கிறாரே.. காலக்கொடுமை

ஹீரோக்களை பொறுத்த வரைக்கும் அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களோ அதற்கு அதிகமாகவே தங்களுடைய உழைப்பை போட வேண்டி இருக்கிறது. பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து தான் நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் அலட்டிக் கொள்ளாமல் எளிதாக நடித்துவிட்டு சென்று விடுகிறார்கள்.

சம்பளம் போக அந்த நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் செலவுகளும் அதிகம். தங்களுடன் எத்தனை உதவியாளர்கள் வருகிறார்களோ அவர்களுக்கான சம்பளம், சாப்பாடு, பாதுகாப்பு என அத்தனையுமே தயாரிப்பாளர்களின் தலையில் விழுந்ததுதான். இதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே ரொம்பவும் உஷாராக அந்த நடிகைகளை வேலை வாங்கி விடுகிறார்கள்.

Also Read:முக்கிய வழக்கில் வசமாக சிக்கிக் கொண்ட விராட் கோலி, தமன்னா.. பிரபல நடிகருக்கும் நேரில் ஆஜராக சம்மன்!

இப்படி ஒரு இயக்குனரிடம் தான் தமன்னா சிக்கி இருக்கிறார். தமிழில் படிக்காதவன் மற்றும் மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுராஜ். இவருடைய இயக்கத்தில் விஷால், சூரி, தமன்னா நடித்த திரைப்படம் கத்தி சண்டை. இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தமன்னாவுக்கு மட்டும் ஒரு கோடி சம்பளமாம்.

இதில் தமன்னா ஓவர் கிளாமராக நடித்திருப்பார். அதற்குக் காரணமே இயக்குனர் சுராஜ் தான். ஒரு கோடி சம்பளம் வாங்கிவிட்டு ரிஸ்க் எடுக்காமல் நடிப்பதற்கு, கிளாமராக நடிப்பது மேல் என்று தமன்னாவை ரொம்பவும் வற்புறுத்தி அந்தப் படத்தில் அப்படி நடிக்க வைத்திருக்கிறார். தமன்னாவும் விருப்பமே இல்லாமல் கொடுத்த சம்பளத்திற்காக அப்படி நடித்தாராம்.

Also Read:பொது இடத்தில் போடவேண்டிய டிரஸ்ஸா இது? தமன்னா அட்டகாசம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்