கமல் நடித்ததில் கஷ்டமான கதாபாத்திரம்.. ஆண்டவர் சொன்ன வேடிக்கையான பதில்

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவுக்காக எத்தகைய அர்ப்பணிப்பும் செய்யக்கூடியவர். பெண் வேடமிட்டு நடிப்பதாக இருந்தாலும் சரி, எத்தனை கதாபாத்திரங்கள் நடிப்பதாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு செய்வார். இப்போது கூட இந்தியன் 2 படத்திற்காக மூன்று மணி நேரம் மேக்கப் போடுகிறாராம்.

அவ்வாறு கமலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகுந்த மெனக்கிடலுக்குப் பிறகு தான் உருவாகிறது. மேலும் கமலஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு சினிமாவில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து படம் தயாரிப்பது, நடிப்பது என ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read : கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

சமீபத்தில் விக்ரம் படத்தின் நூறாவது நாள் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த அளவுக்கு ஒரு இன்டஸ்ட்ரியல் ஹிட் பார்த்ததில்லை என்ற அளவிற்கு விக்ரம் படம் வசூலை வாரிக் குவித்தது. திரைத்துறையில் கமல் தனக்கு நடந்த சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார்.

அப்படி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில் எந்த கதாபாத்திரம் அவர் நடித்ததிலேயே கஷ்டமாக இருந்தது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆண்டவர் ஒரு வேடிக்கையான பதிலை கொடுத்துள்ளார். அதாவது காசு கொடுக்காத படம் தான் கஷ்டமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.

Also Read : இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைத்த பகத் பாசிலின் 4 படங்கள்.. விக்ரம் அமரை மீண்டும் புக் செய்த கமல்

இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தோமே காசு கொடுக்காம போயிட்டாங்களே என்று தான் கவலைபட்டுள்ளேன். மற்றபடி இந்த 63 வருஷமும் தனக்கு திருவிழா தான் என்று கமல் கூறி உள்ளார். கமல் பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தில் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும் கமல் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் மறக்க முடியாத கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also Read : அஜித், விஜய்யுடன் பொங்கலுக்கு மோத தயாராகும் கமல்.. ரஜினிக்கு போட்டியாக விறுவிறுப்பாக தொடங்கிய படத்தின் வேலை.!

- Advertisement -