சிங்கம் என்ன ரோபோவை அடக்கப் போகிறதா.? சூர்யாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் பிரபலம்

Actor Surya: சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் படத்தில் நிறைய சிஜி வேலைகள் உள்ளதால் அதற்கான பணியையும் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா கங்குவா படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தில் இணைய உள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதாவது சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார். மேலும் விடுதலை 2 படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார்.

Also Read : சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் ஹீரோயின்

அதேபோல் சூர்யாவின் வாடிவாசல் படத்தை பற்றியும் பேசி இருந்தார். அதாவது வாடிவாசல் பணி தற்போதும் நடந்து வருவதாக கூறினார். சூர்யா வீட்டில் வளர்த்து வரும் காளை போல லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் முறையில் காளை உருவாகி வருவதாக கூறியிருந்தார். மேலும் அந்த வேலை முடிந்தவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சூர்யாவை கிண்டல் அடிக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது ஏற்கனவே சூப்பர் ஹிட் படமான சிங்கம் என்ற படத்தில் சூர்யா நடித்திருந்தார். அதோடு இப்போது வாடிவாசல் படத்தை ஒப்பிட்டு இருக்கிறார்.

Also Read : விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

அதாவது சிங்கம் பட ஹீரோ வாடிவாசல் படத்தில் ரோபோ காளையை அடக்கும் காட்சியில் நடிக்க இருப்பதாக நக்கல் அடித்து பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி ப்ளூ சட்டை மாறனை கண்டபடி கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கும் தன்னுடைய பாணியல் கிண்டலடித்து கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார் ப்ளூ சட்டை.

இந்நிலையில் சூர்யாவின் கங்குவா படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் வாடிவாசல் முடிந்த கையோடு இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் சூர்யா இணைய உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிஸியாக உள்ளார்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : திடீர்னு எல்லா படங்களிலும் பட்டையை கிளப்பும் பழைய ஹீரோ.. சூர்யா படத்திலும் நடிக்குமாறு வந்த அழைப்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்