விஜய்க்கு தொல்லை கொடுக்கும் உதயநிதி.. தலை விரித்த ஆடும் ரெட் ஜெயண்ட்

Udhayanithi-Vijay: உதயநிதியை பற்றி கடந்த சில நாட்களாகவே நிறைய செய்திகள் இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காததற்கு உதயநிதி முக்கிய காரணம் என்ற செய்தியும் பரவியது. ஆனால் தயாரிப்பாளர் லலித் குமார் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

இந்த சூழலில் விஜய்க்கு உதயநிதி தொல்லை கொடுத்துள்ளார் என்பது போல அரசியல் பெரும்புள்ளி சமீபத்தில் கூறி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். பொதுவாகவே பல வருடங்களாக அரசியலில் இரண்டு ஆளுமை கட்சிகள் இடையே போட்டி நடந்து வருகிறது. ஒரு சின்ன துரும்பு கிடைத்தாலே அது ஊதி பெருசாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் குறித்து பேசி இருக்கிறார். அதாவது அதிமுக ஆட்சியில் இருந்தபோது திரைத்துறையினரை சுதந்திரமாக செயல்பட விட்டோம். ஆனால் இப்போது நிலைமையே அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

அதாவது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு பணத்தை கொடுக்கவில்லை என்றால் பட குழுவினருக்கு எல்லாவித தொல்லையும் கொடுக்கப்படுவதாக நேரடியாகவே உதயநிதியை தாக்கி ஜெயக்குமார் பேசி இருக்கிறார். இதனால் தான் லியோ படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ரெட் ஜெயிண்ட் தலை விரித்து ஆடுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி மட்டுமே கைப்பற்றி வருகிறார். இதன் மூலம் அவருக்கு பெரும் தொகை லாபமாக கிடைத்து வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

விஜய்யை பொறுத்தவரையில் இந்த லியோ படத்திற்கு மட்டும் அவர் சிக்கலை சந்திக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவரது படங்கள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தான் வெளியாகி வருகிறது. கத்தி, சர்க்கார், வாரிசு என அவருடைய படங்கள் வெளியாவதற்கு முன் பெரும் பிரச்சனையை சந்தித்து வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.