அனுஷ்காவை கைகழுவி விட்ட பாகுபலி.. அரியணை ஏறிய தேவசேனாவுக்கு மணமேடை ஏற வாய்ப்பே இல்லையாம்

Actress Anushka: அனுஷ்கா மிகவும் திறமையான மற்றும் துணிச்சலான நடிகை. இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் வாயிலாகவே எல்லோருக்கும் இது நன்கு தெரியும். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு காலகட்டத்தில் உச்ச நடிகையாக அனுஷ்கா வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் காலை வாரி விட்டது.

இந்த சூழலில் இப்போது அனுஷ்காவிற்கு 41 வயதாகிறது. ஆனாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாகவே சுற்றி வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் இனிமேல் அவருக்கு திருமணம் நடப்பதே கேள்விக்குறி என பிரபலம் ஒருவர் கூறி இருக்கிறார்.

Also Read : அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

அதாவது அனுஷ்காவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த படம் பாகுபலி. இந்த படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். மேலும் பாகுபலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபாஸ் உடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவிங் டு ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தார்கள்.

அதன் பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு அனுஷ்காவுக்கு தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இதுவும் திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே தடைபட்டு நின்றது. ஆகையால் அனுஷ்கா மிகுந்த அப்சட்டில் இருந்தார்.

Also Read : செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அனுஷ்கா.. தேவசேனாவுடன் தனுஷ் செய்த தரமான சம்பவம்

மேலும் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது உடல் எடையை அதிகபடியாக அனுஷ்கா கூட்டி இருந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். இப்போது ஆறடி உயரமும், அதிக எடையும் இருப்பதால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம்.

இதனால் இதற்கு மேலும் தேவசேனாவுக்கு திருமணம் நடைபெறுவது சிரமம் தான் என்று பயில்வான் கூறி இருக்கிறார். மேலும் பாகுபலி படத்தில் அரியணை ஏறிய தேவசேனா இனிமேல் மணமேடை ஏற வாய்ப்பே இல்லை என்று பகிர் தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also Read : இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்ட பரிதாபம்.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்