சென்னைக்குள்ள நீங்க பறந்து தான் போகணுமா.? விஜய்க்கு மறுக்கப்பட்ட கோரிக்கையால் ஏற்பட்ட தலைவலி

Thalapathy Vijay: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்டா என்று வடிவேலு காமெடியில் ஒரு வசனம் வரும். அப்படித்தான் இப்போது தளபதி விஜய் கதையில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய்க்கு மட்டும் பிரச்சனை தினமும் டோர் டெலிவரியில் பார்சலாக வந்து சேரும் போல.

அவர் சாதாரணமாக எந்த விஷயம் செஞ்சாலுமே அது சர்ச்சையில தான் முடியுது. அதிலும் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் எதில் சிக்குவார், எப்படி போட்டு மடக்கலாம் என வலை வீசி காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விஜய்யும் எந்த பிரச்சனையும் சிக்காமல் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்போம்னு சைலன்ட் மோடில் இருக்கிறார். நேற்றைய தினம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற முடிந்திருக்கிறது. விஜய் GOAT படத்துக்காக ரஷ்யாவில் படபிடிப்பில் இருந்தார்.

ஒரு ஓட்டுக்காக ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு போனோம்னு அவர் வராமல் இருந்திருக்கலாம். ஜனநாயக கடமைக்கு ஓட்டு போட கூட வராதவர் எப்படி அரசியல் தலைவர் ஆவார் என்று நேற்று கிளப்பி விட்டிருப்பார்கள். தன்னுடைய கடமையை நிறைவேற்ற விஜய் ரஷ்யாவில் இருந்து ஓட்டு போட வந்திருந்தார்.

மறுக்கப்பட்ட கோரிக்கையால் ஏற்பட்ட தலைவலி

தன்னால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வரவேண்டாம் என அவர் நினைத்தார். இதனால் தன்னுடைய வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று விடலாம் என்ற திட்டம் இருந்திருக்கிறது. ஆனால் ஓட்டு போடும் இடத்தில் ஹெலிகாப்டர் இறங்க எந்தவித வசதியும் செய்து தர முடியாது.

நீங்கள் இன்னும் பெரிய அரசியல்வாதி ஆகவில்லை, சாதாரண நடிகர் தான் என்று கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். விஜய் நேற்று ஓட்டு போட சென்றபோது பொதுமக்கள் கூட்டத்தால் ரொம்பவே அவதிப்பட்டு விட்டார்.

ஆனால் விஜய் அந்த இடத்திற்கு வந்ததால் மக்களால் இயல்பாக இருக்க முடியவில்லை என்று சொல்லி சமூக ஆர்வலர் ஒருவர் விஜய் மீது கேஸ் போட்டு இருக்கிறார். சட்டப்படி பார்த்தா அவரை இயல்பா ஓட்டு போட விடாத மக்கள் மீதுதான் விஜய் கேஸ் கொடுத்திருக்கலாம்.

ஒரு மனுஷன் கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி வெச்சா எப்படித்தான் அவரும் சமாளி பாரு என்று தெரியவில்லை. சைக்கிள்ல வந்தா ரோட்டில் கூட்டத்தை கூட்டுறாருன்னு கேஸ் போடுறாங்க. கார்ல வந்தா டிராபிக்கை மதிக்கலன்னு கேஸ் போடுறாங்க.

ஆக மொத்தத்துல தமிழ்நாட்டில நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம் விஜய் தான் சொல்லி முடித்துவிடுவார்கள் போல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்