வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. 21 வருட தவத்திற்கு கிடைத்த பலன்

ரஜினி இன்றும் 30 வயது பாலகன் போல் உலகைச் சுற்றி வருகிறார். அவருக்கு இருக்கும் அந்த எனர்ஜியை பார்த்து மொத்த திரையுலகமே உயர்கிறது. எப்படியாவது ஜெயிலர் படத்தை ஒரு மெகா ஹிட் படமாக மக்களுக்கு தரவேண்டும் என ஆரவாரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் திடீரென்று பிரபல கிரிக்கெட் வீரரை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.

28 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், கேரளா திருவனந்தபுரத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்தார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சாம்சன் அதிரடியாகவும், அசால்டாகவும் சிக்ஸர்களை அடித்து விலாசக்கூடிய திறமை பெற்றவர்.

Also Read: இளம் இயக்குனருக்கு அல்வா கொடுத்த ரஜினி.. அரவணைத்த கமல், பற்றி எரியும் ஈகோ

இவர் சிறு வயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என்று நிறைய பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இது எப்படியோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதுக்கு எட்டியதும் உடனே கிரிக்கெட் வீரர் சாம்சனை அழைத்து தன்னுடைய வீட்டில் விருந்தளித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவுகிறது.

இதைத் தொடர்ந்து சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் “7 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக, ஒரு நாள் ரஜினி சாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பேன் என பெற்றோரிடம் சொல்லியிருந்தேன். 21 வருடங்களுக்குப் பிறகு, தலைவர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்தபோது அது நிஜமாகியிருக்கிறது” என்று தன்னுடைய கனவு நனவானதை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Also Read: 90களில் நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியல்.. உலக நாயகனை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய ரஜினி

மேலும் ஐபிஎல் 2023 மார்ச் மாதம் 31ம் தேதி துவங்க இருப்பதால் அதற்காக சாம்சன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த சூழலில் ரஜினி அவரை அழைத்து விருந்தளித்திருப்பது மேலும் அவருக்கு பூஸ்டர் டோஸ் கொடுத்திருப்பது போல் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் பிரபலங்களை ஊக்குவிப்பதற்காகவே அவர்களை நேரில் அழைத்து கலந்துரையாடுவார். அப்படித்தான் இப்போது தன்னுடைய ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் சாம்சனை அழைத்து அவருக்கு விருந்தளித்துள்ளார்.

Also Read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

- Advertisement -

Trending News