வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாலச்சந்தர், நாகேஷுக்கு ஏற்பட்ட சண்டை.. அவரால் கொலைவெறியில் சுற்றிய கமல்

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலச்சந்தர். சினிமாவை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த காலத்திலேயே பெண்களை மையமாக வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். அவருடைய படங்களில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். 70களில் இவர் இயக்கிய அரங்கேற்றம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அதிர்வலையை உண்டாக்கியது.

மேலும் கோலிவுட் சினிமாவின் இரு பெரும் தூண்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களை செதுக்கியது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் தான். இவர்கள் இருவருக்குமே குரு அவர்தான். 60களில் இருந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் கலக்கிய நாகேஷும், பாலச்சந்தரும் மிக நெருங்கிய நண்பர்கள்.

Also Read:இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

நாகேஷ் இல்லாத பாலச்சந்தர் படங்களே இல்லை என்று சொல்லலாம். காமெடியானாக இருந்த நாகேஷை ஹீரோவாக வைத்து இவர் சர்வர் சுந்தரம் மற்றும் எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதீத நட்பும் ஒரு நாள் ஆபத்தாகும் என்பது போல் சின்ன கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சேர்ந்து படம் பண்ணவே இல்லை.

ஆனால் இருவருக்குமான அன்பு என்பது அப்படியே இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் நாகேஷை மனதில் வைத்து நிறைய கதைகளை எழுதி இருக்கிறார் பாலச்சந்தர். அப்படி ஒரு கதையில் உலக நாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார். பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் கமலால் நடிக்க முடியவில்லை. இதனால் செம்ம காண்டான பாலச்சந்தர் கமலஹாசனை பளார் என்று அறைந்து விட்டாராம்.

Also Read:தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

மேலும் நாகேஷை மனதில் வைத்து இதை எழுதி விட்டேன், அவனிடம் ஸ்கிரிப்ட் கொடுத்தாலே புரிந்து கொண்டு நடித்து விடுவான், இவ்வளவு கஷ்டம் தேவையில்லை என்று சொல்லி புலம்பினாராம். இதனால் வருத்தம் அடைந்த கமலஹாசன், நாகேஷை நேரில் சந்தித்து இவர் இப்படி எல்லாம் செய்கிறார், எனக்கு ரொம்பவும் கோபமாக வருகிறது என்று சொன்னாராம்.

மேலும் கோபத்தில் தலையணையை வைத்து அழுத்தி அவரை கொன்று விடலாம் போல் இருக்கிறது என்று வேறு சொன்னாராம். இதை கமலஹாசனே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகேஷ், இயக்குனர் பாலச்சந்தர் இருக்கும்பொழுது இந்த சம்பவத்தை பற்றி பேசி சிரித்திருக்கிறார்.

Also Read:இந்தியன் 2-விற்கு பின் அடுத்தடுத்து கமல் கூட்டணி போடும் 2 இயக்குனர்கள்.. 1000 கோடி வசூலை பார்த்தே ஆகணுமாம்

 

- Advertisement -

Trending News