பாலாவிடம் பிரியாணிக்கு சிக்கிய அடுத்த ஆடு.. தால்சாவுக்கு ரெடியாகும் முத்தின கத்திரிக்காய்

Director Bala: இயக்குனர் பாலாவுக்கு கடைசி ஐந்து வருடங்களாக எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. நடிகர் துருவ் விக்ரமை வர்மா படத்தின் மூலம் அறிமுகமாக்க நினைத்து அவருக்கு மொத்தமும் சொதப்பி அதன் பின்னர் படங்களை இல்லாமல் போய்விட்டது. தற்போது அவர் கைவசம் இருக்கும் படம் வணங்கான் தான். இந்த படமும் ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட சிக்கலை சந்தித்தது.

நடிகர் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் நந்தா மற்றும் பிதாமகன் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக வணங்கான் படத்தில் இணைந்தது. படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோதே சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அவர் விலகியதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைந்துவிட்டது.

Also Read:ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அருண் விஜய்.. சூர்யாவின் முடிவால் அடித்த ஜாக்பாட்

சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிய பிறகு நடிகர் அருண் விஜய் இது சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அருண் விஜய் இணைந்த பிறகு படப்பிடிப்பு வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்றன. தற்போது 60% வேலைகள் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான பிரபலமும் இணைந்து இருக்கிறார். சாகித்திய அகாடமி விருது வாங்கிய பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மெய். பா. தான் அந்த பிரபலம். இந்த படத்தில் அவருக்கு எப்படிப்பட்ட கேரக்டர் என்று சரியாக தெரியவில்லை. தற்போதைக்கு அவர் நடிக்க இருப்பது மட்டும் உறுதியாக இருக்கிறது.

Also Read:பாலாவின் காலில் விழுந்த பாலிவுட் நடிகை.. வட இந்தியாவில் நடந்த சம்பவம்

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த மிகப்பெரிய வெற்றி அடைந்த துணிவு திரைப்படத்தில் பிரபல பேச்சாளர் மோகனசுந்தரம் இந்த மெய். பா கேரக்டரில் தான் நடித்திருந்தார். படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இது பயங்கர வைரல் ஆகியது. அதனாலேயோ என்னவோ வணங்கான் திரைப்படத்தில் அந்த வைரல் கேரக்டரையே புக் செய்து இருக்கிறார் பாலா.

ஏற்கனவே அவன் இவன் திரைப்படத்தில் பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக டேமேஜ் செய்து வைத்திருந்தார். இப்போது இந்த பிரபல பத்திரிக்கையாளர் பாலாவிடம் சிக்கி இருக்கிறார். இவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகத்தான் இருக்கிறது.

Also Read:போலீஸ் கேரக்டரில் அசத்திய 5 நடிகைகள்.. மொத்தமாக மாறிய பாலா பட நாச்சியார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்