போக்குவரத்து துறையை பழிவாங்கும் காவல்துறை.. கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் அரசு

MK Stalin: தமிழ்நாட்டுல என்னதான்பா நடக்குது என மக்களே நொந்து போகும் அளவுக்கு சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு ஒரு பிரச்சனைனா காவல்துறைக்கு போவாங்க. அந்த காவல்துறைக்கே பிரச்சனைனா எங்க போறது என்ற நிலைமை தான்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு அரசு பஸ்ஸில் போலீஸ் ஒருவர் சீருடை அணிந்தவாறு பயணித்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் வேலை விஷயமாகத்தான் நான் போகிறேன், சீருடை அணிந்து இருக்கிறேன் நான் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் பஸ்ஸில் இலவச பயணமா. காவல்துறைக்கு கிடையாதா என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இந்த வீடியோ ஒரு சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகிறது. அந்த போலீஸ்காரரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்கிறார்கள். அப்படியே இன்னொரு பக்கம் திரும்பினீங்கன்னா அரசு பஸ்களை எல்லாம் டிராபிக் போலீஸ் மரித்து சீருடை அணியவில்லை, சீட் பெல்ட் போடவில்லை என பைன் கட்ட சொல்கிறார்கள்.

போக்குவரத்து துறையை பழிவாங்கும் காவல்துறை

அதுவும் டிரைவர் தன்னுடைய சொந்த காசை தான் கட்ட வேண்டும் என்கிறார்கள். நேற்றைய ஒரு நாளில் 22 பஸ்கள் இப்படி மாட்டியிருக்கிறது. எங்கேயோ இடிக்குதே, போலீஸ்காரங்க பொதுமக்கள தானே இப்படி பண்ணுவாங்கன்னு தோணலாம். நாங்குநேரி சம்பவத்தின் எதிரொலி தான் இது.

எங்கள அசிங்கப்படுத்தின உங்கள என்ன பண்றோம் பாருங்க என காவல்துறை களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை பெரிய அளவில் பூதாகரமாவதற்குள் பேசி முடித்துக் கொள்ளுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுகிறார்.

இருந்தாலும் தமிழக அரசு தரப்பில் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது. இத்தனைக்கும் காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலினின் கீழ் இயங்குகிறது. அப்படி இருக்கும்போது இதை முளையிலேயே கிள்ளி எரிந்திருக்க வேண்டும்.

போக்குவரத்து துறை சங்கத் தொழிலாளர்கள் மீடியாக்கள் மூலம் ஸ்டாலின் இடம் நேற்று முறையீடு செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இன்று உள்துறை செயலாளர் அமுதா மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பவனிந்தர் இருவரும் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசி சுமுக தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -