சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்தியன் 2 படத்திற்கு சாதகமாய் முடிந்த கெட்ட நேரம்.. எல்லா பக்கமும் ஆண்டவருக்கு க்ளியரான ரூட்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தியன் 2 படத்தில் கிரேன் சாய்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கர், கமலஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைக்கா இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

ஒருவர் மற்றவருடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு, ஒருவர் மற்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரச்சனையை பெரிதாக்கினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்குவதற்காக சங்கர், லைக்கா, கமலஹாசன் மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பிறகு படத்தை விரைவில் துவங்க முடிவெடுத்தனர்.

தற்போது தெலுங்கு பிரபல ராம் சரணின் 15-வது படத்தை சங்கர் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகுதான் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கானாவில் ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் அறிவித்து படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் ஹைதராபாத்தில் நடைபெறும் சூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வேறு மாநிலத்தில் படப்பிடிப்பை நடத்தலாம் என்றால் ராம் சரணுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராம்சரண் படம் நின்று போனது .

இப்பொழுது சங்கர் ஃப்ரீ ஆகிவிட்டார். அப்புறம் என்ன இந்தியன் 2 படத்திற்கு ரூட் க்ளியர் ஆகிவிட்டது. இப்போது இந்தியன் 2 படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். கமல் போர்ஷன் அல்லாது மற்றவர்கள் நடிக்கக் கூடிய காட்சிகளை எடுக்க தயாராகி வருகிறார்கள்.

முதல் கட்டமாக சித்தார்த், காஜல் அகர்வால் போன்றவர்கள் நடிக்கும் காட்சியை இப்பொழுது படமாக்க இருக்கிறார்கள். கெட்ட நேரத்திலும் கமலுக்கு நல்ல நேரம் தான். விக்ரம் படத்தின் மூலம் வசூல் வேட்டை ஆடிய கமல், இந்தியன் 2 படத்தில் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை காட்டப் போகிறார்.

- Advertisement -

Trending News