லோகேஷை சைலன்டாக காலை வாரிவிட்ட ரஜினி.. 45 வருட கேரியரில் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்

Director Lokesh and Rajini Controversy: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளிவந்து தாறுமாறாக லாபத்தை வாரி குவித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்பட சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பற்றி சர்ச்சை எழுகிறது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் 171 படத்தை எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்தது. அதற்காக ரஜினியிடம் லோகேஷ் கதையை சொல்லியிருக்கிறார்.

அதில் முக்கியமான சில ஸ்டண்ட் காட்சிகளையும் விலக்கி இருக்கிறார். இந்த கதைகள் அனைத்தையும் மொத்தமாக ரஜினி கேட்டபின் அவருடைய சம்மதத்தையும் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் கமிட்டான ரஜினி படம் தான் ஜெயிலர். அப்பொழுது படத்திற்கு தகுந்தாற்போல் சில காட்சிகளுக்கு லோகேஷ் கூறிய முக்கியமான விஷயங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Also read: ரஜினி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத 5 நண்பர்கள்.. தளபதி தேவாவுடன் தொடரும் நட்பு

அதாவது ரஜினியோட அடுத்த கதைக்காக லோகேஷ் ஸ்னைப்பர் சூட்டிங் சீனை தாறுமாறாக வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதை அப்படியே நெல்சனிடம், ரஜினி கூறியிருக்கிறார். உடனே அவர் ஜெயிலர் படத்தின் கதைக்கு எடுத்துக்கொண்டார். இவர் தான் அப்படி செய்திருந்தாலும் இதில் நடிக்கும் போது ரஜினியாவது இது லோகேஷ் கூறிய கதையாச்சே.

இதை எப்படி இந்த படத்தில் வைக்கலாம், அதுவும் நான் உங்களை நம்பி சாதாரணமாக சொன்னதை இதில் கொண்டு வருவது தவறு என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அதையெல்லாம் விட்டுட்டு படத்தின் வெற்றிக்காகவும், லாபத்திற்காகவும் நெல்சன் உடன் அமைதியாக இருந்து லோகேஷை காலை வாரிவிட்டு இருக்கிறார்.

Also read: மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

இப்படத்தை பார்த்த பிறகு லோகேஷ் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டார். இந்த சீன் ரஜினி சாரிடம் நான் சொன்னது, எப்படி அவர்களுடைய படத்திற்கு இதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று மிகவும் அப்ஸட் ஆயிருகிறார். அதுவும் ரஜினியை இந்த வேலையை பார்த்து இருக்கிறார் என்று நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார்.

இதனால் எந்த காலத்திலும் ரஜினியுடன் இனி சகவாசமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று லோகேஷ் முடிவெடுத்து இருக்கிறார். ரஜினியின் 45 வருட கேரியரில் இதுவரை ஏற்படாத ஒரு கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார். இன்னைக்கும் இவர் இந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு இவருடைய நேர்மையும் அசைக்க முடியாத பண்பும் தான் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறது. அதையே தற்போது கெடுத்துக் கொண்ட மாதிரி அவப்பெயரை சம்பாதித்து விட்டார்.

Also read: ரஜினியை குருவாக ஏற்று ஆன்மீகவாதிகளாக மாறிய 5 நடிகர்கள்.. தலைவரை மிஞ்சிய தொண்டன்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -