ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கமலுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த மோசமான கதாபாத்திரம்.. பலரிடமும் சில்மிஷம் செய்து வாங்கிய பட்டம்

Kamal worst charater acted in Movie: எந்த கதாபாத்திரமானாலும் தனித்துவமான நடிப்பை கொடுத்து சினிமாவில் முற்றும் தெரிந்த ஞானி என்ற இடத்தில் கமலஹாசன் இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் ஹீரோ என்ற அந்தஸ்தை அடைவதற்கு மிகவும் போராடி வந்திருக்கிறார். அதிலும் மோசமான கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து நடித்து இருக்கிறார்.

அப்படி இவர் மோசமான கேரக்டரில் நடித்து வெளிவந்த படம் உணர்ச்சிகள். இப்படத்தை 1976 ஆம் ஆண்டு ஆர் சி சக்தி என்பவர் இயக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இந்தப் படம் கமல் நடித்த படங்களிலேயே ரொம்பவே மோசமான படம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இதில் கமல் பல பெண்களிடம் சில்மிஷம் செய்து அவர்களிடம் தகாத உறவை வைத்து கொள்வார்.

இதில் ஹீரோயினாக விலைமாது பெண்ணாக ஸ்ரீவித்யா நடித்திருப்பார். அத்துடன் கமல் இப்படத்தில் பார்க்கும் அனைத்து பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டு உடல்ரீதியான துன்புறுத்தலை கொடுத்திருப்பார். இதனால் கமலுக்கு உயிர் கொல்லி நோய் வந்துவிடும். அந்த அளவிற்கு மோசமான கேரக்டரில் நடித்து பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு கதை அமைந்திருக்கும்.

இதனாலேயே இந்த படத்தின் மூலம் இவருடைய பெயர் அதிக அளவில் டேமேஜ் ஆகி இருக்கும். அத்துடன் இவர் இப்படிப்பட்டவர் தான் என்று மக்கள் இவரை ஒதுக்கி வைக்கும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனாலும் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்ததால் தொடர்ந்து இவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பை இப்படம் பெற்றுக் கொடுத்தது.

அந்த வகையில் இந்த படம் தான் இவருக்கு ஹீரோவுக்கான அந்தஸ்தை வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். இன்னும் சொல்ல போனால் ஹீரோவாக ஒரு சான்ஸ் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதன் மூலம் தன்னுடைய பெஸ்ட் கொடுத்து வளர வேண்டும் என்றுதான் அனைத்து நடிகர்களுமே யோசிப்பார்கள். அதை தான் கமலும் செய்திருக்கிறார் என்பது இந்த படத்தின் மூலம் அப்பட்டமாக பார்க்க முடியும்.

அத்துடன் இந்த படத்தை போலவே சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அனைவரிடமும் கைதட்டலை பெற்றிருப்பார். ஆக மொத்தத்தில் நடிப்புன்னு வந்துவிட்டால் எந்த எல்லைக்கும் சென்று நடிப்பேன் என்பதற்கு இந்த இரண்டு படங்களை உதாரணமாக சொல்ல முடியும். அதனால் தான் தற்போது அனைவரது மனதிலும் உலக நாயகன் என்ற இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

Trending News